ஹேக்கிங் பீதி.. புதிய போன், புதிய நம்பர்... ஒட்டுமொத்தமாக மாறும் தவெக அமைச்சர்கள், MLAக்கள்! ஏன்?

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மொபைல் எண்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

    Advertisement

    கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் பிரமுகர்கள் முதல் புதியதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று தவெகவின் முக்கிய தலைகள் அனைவரும் தங்களின் பழைய எண்களைக் கைவிட்டு, புதிய எண்களுக்கு மாறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் முக்கிய காரணங்கள் உள்ளதாம். உளவு பார்க்கப்படும் பயம், ஹேக்கிங் பீதி மற்றும் அரசியல் எதிர்காலம் காரணமாக அவர்கள் போனை மாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    போன் ஹேக்கிங் மற்றும் ஒட்டுகேட்பு பயம்

    தங்களின் அரசியல் நகர்வுகளையும், அரசு ரீதியான ரகசியங்களையும் எதிர்க்கட்சிகள் அல்லது டெல்லி உளவு பார்க்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் தவெக தரப்பினரிடம் எழுந்துள்ளது.

    குறிப்பாக, தங்களது ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது தங்களின் உரையாடல்கள் தொடர்ந்து ஒட்டுகேட்கப்படலாம் என்று அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தீவிரமாக அஞ்சுகின்றனர்.

    எந்தவொரு திட்டமோ அல்லது கட்சியின் முடிவுகளோ, அல்லது ரகசியங்களோ வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதில் கட்சித் தலைமை மிகவும் உறுதியாக உள்ளது. இந்த அச்சத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே, பழைய போன்களையும் எண்களையும் முழுமையாகத் தவிர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பலரும் அரசியலுக்கு புதியவர்கள்

    தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களில் பெரும்பாலோர் அரசியலுக்கு முற்றிலும் புதியவர்கள். சாதாரண பின்னணியில் இருந்தும், திரைத்துறை மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் இருந்தும் வந்தவர்கள்.

    இவர்கள் பொதுவாழ்விற்கு வருவதற்கு முன்பாகப் பயன்படுத்திய மொபைல் எண்கள், இவர்களது நண்பர்கள், பழைய உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்கனவே உள்ளன.

    ஒரு மாநிலத்தின் அமைச்சராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பொறுப்பேற்ற பிறகு, பழையபடி சாதாரண எண்களைப் பயன்படுத்துவது அரசு நெறிமுறைகளுக்கும் பாதுகாப்பு விதிகளுக்கும் ஏற்றதாக இருக்காது.

    அரசுப் பணிகளுக்கு மத்தியில் தேவையற்ற அழைப்புகளும், பழைய உறவினர்களின் போன் கால்களும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    அரசியலுக்கே சிக்கல் ஏற்படும்

    அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இவர்களின் மொபைல் போன்களில் பல்வேறு தனிப்பட்ட விவரங்கள், வணிக ரீதியான பரிவர்த்தனைகள், மற்றும் ஜாலியான குடும்ப உரையாடல்கள், அமைச்சர் சரத்திற்கு சிக்கலை ஏற்படுத்திய வீடியோ போன்ற வீடியோக்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

    அரசியலில் தங்களுக்கு அனுபவம் இல்லாத காலகட்டத்தில் அவர்கள் செய்த வாட்ஸ்அப் சாட்கள், தனிப்பட்ட புகைப்படங்கள், அவர்களால் பகிரப்பட்ட கருத்துக்கள் ஆகியவை இப்போது பொதுவெளியில் கசிந்தால், அது அவர்களின் அரசியல் வாழ்க்கையையே அடியோடு பாதிக்கும் அபாயம் உள்ளது.

    டிஜிட்டல் உலகில், பழைய போஸ்டுகளை, ஆதாரங்களை தோண்டி எடுத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாகத் தங்களை வீழ்த்த ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும் என்று தவெக எம்எல்ஏக்கள் அஞ்சுகின்றனர். இதையடுத்தே இவர்கள் போனை மற்றும் போன் எண்களை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    English Summary

    Afraid of Hacking many Tamilaga Vettri Kazhagam MLAs and Ministers chaned their phone number