சென்னை: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியிலிருந்து விலக்குவதை பற்றி யோசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ரெண்டு தொகுதிகளிலும் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இதுதான் இடைத்தேர்தலுக்கான காரணம்.
இந்த இரண்டு பேர் ஜெயித்துதான் தவெக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று கிடையாது. விஜய் முதலமைச்சராக தொடர்வதற்கு ஏற்கெனவே போதுமான பலம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கூட்டணி கட்சிகளின் உதவியோடுதான் ஆட்சி தொடர்கிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐயுஎம்எல், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஆதரவு கொடுத்திருக்கின்றன. இந்த ஆதரவுக்கு கை மாறாக இக்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று ஒதுங்கிய நின்றன. இது இரண்டு கேள்விகளை எழுப்பியது. ஒன்று ஒதுங்கியிருப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் கழன்றுக்கொள்ளலாம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் நினைக்கிறதா? என்று பேச்சுக்கள் அடிப்பட்டன. இல்லை.. அப்படியெல்லாம் கிடையாது! இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர கம்யூனிஸ்ட் கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர்கள் அறிவித்தனர். இரண்டாவது கேள்வி.. நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக சொன்னார்களே! அப்படியெனில் அவர்கள் வைக்கும் டிமாண்ட் பெருசாக இருக்குமோ? என்பதுதான். இது நிஜம்தான். தவெக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு தேவையற்ற நடவடிக்கைகளை முதல் ஆளாய் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் எதிர்க்கின்றன. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முயற்சியாக இருக்கட்டும், தூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பது, நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரியது, விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது, மாநகராட்சி பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது.. இப்படி பல விஷயங்களுக்கும் எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. இதெல்லாம் தவெக அரசுக்கு பெரிய நெருக்கடியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக தவெக சோஷியல் மீடியா புலிகள் களத்தில் இறங்கின. திமுக ஆட்சியில் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு இப்போது தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொன்னா எப்படி? என்று கேள்வி எழுப்பின. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதற்கும் கவலைப்படாமல், தவெக அரசை விட்டு வெளுத்து வந்தன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் கம்யூனிஸ்டுகள் கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன. அதிமுகவிலிருந்து விலகாமலேயே மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இடைத்தேர்தலுக்கு அவசியமில்லாமல் இருந்திருக்கும். இப்போது இந்த தேர்தலில் தவெக வெற்றிப்பெறுகிறது எனில், அடுத்தடுத்து இடைத்தேர்தல் நடக்கும். திட்டமிட்டு உருவாக்கப்படும் இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறி, தவெகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் இறங்கின. தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் தாராளமாக பணம் விளையாடுகிறது. தவெகவினர்தான் அதிக அளவில் பணத்தை கொடுக்கிறார்கள் என்று தேர்தல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இது மொத்தமும் தவெகை கடும் அதிருப்தியில் தள்ளியது. எனவே தேர்தல் முடியட்டும் என்று கட்சி தலைமை பொறுமை காத்து வருகிறது. தேர்தல் முடிந்த பின்னர், கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை கழற்றிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் பேச்சுக்கள் அடிப்படுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு 4 ஆக இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றிப்பெற்றால் 2 எம்எல்ஏக்கள்தான் கிடைப்பார்கள். அப்படி இருக்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி கழற்றிவிடுவார்கள்? என்றும் கேள்வி எழுகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது தவெக தலைமை கடும் அதிருப்பதியில் இருக்கிறது என்பது மட்டும் நிஜம். ரிசல்டுக்கு பிறகு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.தவெக ஆட்சிக்கு ஆதரவு
ஆதரவு உண்டு
சரியான பாதையில் வழிநடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள்
கொஞ்சம் கூட ரசிக்காத தவெக
இடைத்தேர்தல் நிலைப்பாடு
கூட்டணியிலிருந்து கழற்றிவிட முடிவு?