தர்மேந்திர பிரதானை தொடர்ந்து அடுத்த டார்க்கெட் நிதின் கட்காரி.. மெல்ல வெடிக்கும் பூகம்பம்

  • சென்னை: நீட் தேர்வில் வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை டார்க்கெட் செய்து போராடிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், அவரை பதவி விலக வைத்தனர். இந்நிலையில் இ20 ஜனதா என்ற பெயரில் ஆன்லைனில் உருவாகியுள்ள அமைப்பினர், அடுத்தாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை டார்க்கெட் செய்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி, அவரை பதவி விலக வைக்க திட்டமிட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் முழுக்கவே கடந்த ஒரு வாரமாகவே நிதின் கட்காரியை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

    Advertisement

    மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் குரல் கொடுத்து வந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்தவும் முனைந்தார். அவரது யோசனைப்படி தான் பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்துப் பயன்படுத்தப்படுகிறது.

    Advertisement

    கரும்பு, மக்காசோளம் விவசாயிகளுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிதின் கட்கரி இந்த திட்டத்தை செயல்படுத்தியதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் நிதின் கட்காரி தனது சுயலாபத்திற்காகத்தான் இது போன்று எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகளும் உள்ளது. அவரது மகன்கள் எத்தனால் தொழிலில் ஈடுபட்டு இருப்பதால் எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.

    ஆனால் இக்குற்றச்சாட்டை நிதின் கட்கரி திட்டவட்டமாக மறுத்து வருகிறார்கள். எத்தனால் கலப்பு திட்டத்தை முன்னெடுத்ததில் எனக்கு தனிப்பட்ட ஆதாயம் மற்றும் நலன்கள் இல்லவே இல்லை.. வாகனங்களால் ஏற்படும் மாசைக் குறைக்கவும், நாட்டின் இறக்குமதிச் செலவை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்துதான் எத்தனாலை ஆதரித்து வருகிறேன். எனவே என்னை பற்றி பரவும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

    Advertisement

    எனது மகன்களின் வணிகத்தில் எத்தனாலின் பங்கு மிகக்குறைவு. அவர்களுக்கு 1,600 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. விலை நிர்ணயம் அல்லது கொள்முதலில் எனக்கு எந்தப் பங்கும் கிடையாது. இந்த எத்தனால் கலப்பு திட்டம் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதே தொடங்கினார்கள். அதற்கு அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசும் ஆதரவு கொடுத்தது. இப்போதும் தொடர்கிறது என்றார்.

    ஆனால் அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் லீக் பிரச்சனை காரணமாக ஜென்சி இயக்கத்தினரின் போராட்டம் காரணமாக தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அடுத்த டார்க்கெட் ஆக நிதின் கடகாரி உள்ளார். அவரை சமூக வலைதளங்களில் மிகப்பிரபலமான யூடியூபர்களே டார்கெட் செய்து தாக்க தொடங்கினார்கள். தற்போது சமூக வலைதளங்களில் தர்மேந்திர பிரதானைவிட மோசமாக இலக்கு வைத்து நிதின் கட்காரி டார்க்கெட் செய்யப்பட்டு வருகிறார்.

    Advertisement

    இந்த சூழலில் சமூக ஊடகங்களில் பரவும் புகார்கள் ஆதாரமற்றவை என்றும், ஒரு பெரிய தவறான தகவலைத் திட்டமிட்டு பிரசாரம் செய்வதாக நிதின் கட்காரி வேதனை தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது எரிபொருள் திறன் சற்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், வாகனங்களின் எஞ்சின் சேதமடையும் என்ற புகார்களை நிதின் கட்கரி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

    இதற்கிடையே எத்தனால் பயன்பாடு விவகாரத்தில் நிதின் கட்கரி மீது பீகாரைச் சேர்ந்த யூடியூப்பர் மனீஷ் காஸ்யப் உட்பட 4 பேர் அவதூறு பரப்பிவிட்டதாக புகார் எழுந்தது.இப்போது எழும் அனைத்து விமர்சனங்களுக்கும் இவர்கள் தான் காரணம் என நிதின் கட்காரி கோபத்தில் உள்ளார். இவர்கள் மீது நாக்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் பிரச்சனை வேறு ரூபத்திற்கு போய்விட்டது. நிதின் கட்காரிக்கு எதிராக e20 என்ற இயக்கமே தொடங்கிவிட்டார்கள். போராட்டம் செய்யவும் தயாராகி வருகிறார்கள். இது நிதின் கட்காரிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

    English Summary

    After Dharmendra Pradhan, Nitin Gadkari is the next target: The e20 issue is slowly blowing up.