விஜய் எழுதிய ரகசிய கடிதம்.. சென்னை விமான நிலையத்தை 'பிபிபி' முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு?

  • சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தை பொது - தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி முதல்வர் விஜய் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ரகசிய கடிதம் எழுதி இருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை நீக்கிவிட்டு அந்த பொறுப்பை தனியாருக்கு ஒப்படைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் ஒன்றை எழுதிருந்தார். இதுதொடர்பாக ஆகஸ்ட் 5ஆம் தேதி விஜய் கடிதம் எழுதியதாக தகவல்கள் கசிந்தது. சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்தே இந்த கடிதம் தொடர்பாக தெரிய வந்தது.

    Advertisement

    அந்த கடிதத்தில், சென்னை சர்வதேச விமான நிலையம் மோசமான செயல்பாடுகளை உங்களுக்கு கொண்டு வரவே நான் கடிதத்தை எழுதுகிறேன். சென்னை விமான நிலையம் கடினமான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஏப்ரல் 2026 நிலவரப்படி, பயணிகளின் வருகையில் கொல்கத்தாவிற்கு பின் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 2.7 கோடியாக உள்ளது.

    தற்போது நடந்து வரும் விரிவாக்க பணிகள் முடிந்த பின், இது ஆண்டுக்கு 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டுக்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிக்கையில், இந்த விமான நிலையம் 2.31 கோடி பயணிகளை மட்டுமே கையாள்வதாக குறிப்பிட்டுள்ளது. ஒருநாளைக்கு சராசரியாக உள்நாட்டு விமானங்கள் சுமார் 320 ஆகவும், சர்வதேச விமானங்கள் 115ஆகவும் உள்ளது.

    Advertisement

    மொத்தமாக 435 விமானங்கள் கையாளப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு மத்தியில் சென்னை விமான நிலையத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அடிப்படை பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு பிரச்சனைகள் பற்றி பயணிகளும், உலகளாவிய முதலீட்டாளர்களும் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

    அதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம், மேலாண்மை மற்றும் எதிர்கால மேம்பாட்டு பணிகளை, ஏஏஐ அல்லாத வேறு தகுதியான நிறுவனத்திடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் விஜய்யின் கடிதம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தை பொது - தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி முதல்வர் விஜய் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ரகசிய கடிதம் எழுதி இருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    English Summary

    After Vijay letter, Union Government Moves to Revamp Chennai International Airport Through Public-Private Partnership