சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

  • சென்னை: அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி. விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அரசியல் நடத்தி வருகிறார் சி.வி.சண்முகம். சீட்டுக்கட்டு போல அதிமுக சரிவதாக சி.வி.சண்முகம் பச்சை பொய் சொல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது சி.வி.சண்முகம் தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றார் எனக் குறிப்பிட்டார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "எடப்பாடி பழனி​சாமி தலை​மையி​லான அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரு​கிறது. மக்​களின் நன்​ம​திப்​பை​யும் இழந்து வரு​கிறது. யாருடைய கருத்​தை​யும் கேட்க மாட்​டேன், குடும்​பத்​தினர் கருத்தை மட்​டும் கேட்​பேன், பணம் கொடுப்​பவர், பெற்​றுத் தருபவர்​களின் பேச்சை மட்​டும் பழனி​சாமி கேட்​ப​தால் நினைத்து பார்க்க முடியாத இழப்பை அதி​முக சந்​தித்​துள்​ளது.

    திமுகவை வீழ்த்த வேண்​டும் என்ற நோக்​கத்​துக்​காக அதி​முக தொடங்​கப்​பட்​டது. ஆனால், முதல்​வ​ராக வர வேண்​டும் என்​ப​தற்​காக திமுக​வுடன் கூட்​டணி வைக்க முயன்​ற​தால் அதி​முக தனது சுய நிலையை இழந்​துள்​ளது. கட்​சிக்​காக உழைத்​தவர்​கள் தற்​போது இயக்​கத்​தை​விட்டு செல்​கின்​றனர். அவர்​களின் மனவலியை உணராமல் துரோகி என சாதா​ரண​மாக பழனி​சாமி சொல்​கிறார்.

    Advertisement

    தேர்​தலில் 47 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளேன் என பொய் சொல்​கிறார். அதில் 31 தொகு​தி​களில் வெற்றி பெற்றது பாமக தயவால்​தான். பாமக​வுடன் கூட்​டணி இல்லை என்​றால், வட மாவட்​டங்​களில் வெற்றி பெற்​றிருக்க முடி​யாது. இது​தான் உண்​மை. இந்த உண்​மையை ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்​டும். தவறுகளை பழனி​சாமி உணர வேண்​டும். தவறுகளை சரி செய்ய வேண்​டும்." எனப் பேசியிருந்தார்.

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "சி.வி.சண்முகத்தை தவெக இயக்கலாம். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி. சட்டத்துறையில் இருந்து கொழுக்கும் கனிமவளத் துறையை கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை.

    Advertisement

    சீட்டுக்கட்டு போல அதிமுக சரிவதாக சி.வி.சண்முகம் பச்சை பொய் சொல்கிறார். சி.வி.சண்முகம்தான் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றார். குடும்ப ஆட்சியை பற்றி பேச சி.வி. சண்முகத்திற்கு யோக்கியதை இல்லை. அதிமுக மூழ்குகின்ற கப்பல் இல்லை. மரகதம் குமரவேலுக்கு யார் வாய்ப்பு கொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

    வளர்த்த இயக்கத்தை குறை சொல்ல சி.வி.சண்முகத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க, தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியமைக்க முயற்சித்ததாக சி.வி.சண்முகம் தவறான தகவலை பரப்புகிறார். சி.வி.சண்முகம் தொடர்ந்து இப்படியே பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    English Summary

    It was Edappadi Palaniswami who bestowed various positions within the AIADMK upon CV Shanmugam. CV Shanmugam is engaging in dynastic politics in Villupuram district. Former AIADMK Minister Agri Krishnamurthy has stated that CV Shanmugam is telling a blatant lie by claiming the AIADMK is collapsing like a house of cards.