1 அதிமுக, 1 திமுக, தவெக 0.. டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவதால் ஓட்டு ஏறாது: தராசு ஷ்யாம் ஒரே போடு

  • சென்னை: "2 தொகுதிகளிலுமே தவெகவுக்கு ஆதரவான சூழல் இல்லை.. நீங்கள் பிரச்சாரம் வந்தால்தான் தொகுதிகளை காப்பாற்ற முடியும் என்ற தகவல் முதலமைச்சருக்கு போயிருக்கும். அதனால்தான் பொதுத்தேர்தலின்போது செய்யாத அளவுக்கு, இப்போது 4 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இடைத்தேர்தல்களில் எந்த முதல்வரும் பிரச்சாரத்துக்கு செல்ல மாட்டார்கள். ஆனால், ரோடு ஷோவை நடத்தியிருப்பதால், விஜய்க்கு ஏதோ அச்சம் வந்துள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருதது தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தராசு ஷ்யாம் பேசும்போது, "கோவையிலிருந்து தாராபுரத்துக்கு 40 கி.மீட்டருக்கு ஹெலிகாப்டரில் போகிறார்.. எந்த முதலமைச்சரும் இப்படி செல்ல மாட்டார்கள்.. காரணம், கோவையிலிருந்து தாராபுரம் வரும்போது, முதலமைச்சரை மக்கள் நேரடியாகவே பார்ப்பார்கள்.. முதலமைச்சரும் மக்களை பார்ப்பார்..

    Advertisement

    ஜெயலலிதாவின் கடைசி காலங்கள்

    ஜெயலலிதாவின் கடைசி காலங்களில் அவரது உடல்நிலை காரணங்களுக்காக மட்டுமே ஹெலிகாப்டர், ஹெலிபேட் பயன்படுத்தினார். தற்போதைய முதல்வர் பயன்படுத்துவதை வீண் செலவாகவே பார்க்கறேன்.

    மதுராந்தகம், தாராபுரம் இரண்டுமே விவசாய பகுதிகளாகும்.. அதனால் ரோடு ஷோவிற்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை.. பேரிகார்டுகளும் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன.. ஆனால் பல பகுதிகள் காலியாக இருந்தன.. இதனால் இந்த காலியாக காணப்பட்ட இடங்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகின.

    விஜய்க்கு வந்த அச்சம்?

    2 தொகுதிகளிலுமே தவெகவுக்கு ஆதரவான சூழல் இல்லை.. நீங்கள் பிரச்சாரம் வந்தால்தான் தொகுதிகளை காப்பாற்ற முடியும் என்ற தகவல் முதலமைச்சருக்கு போயிருக்கும். அதனால்தான் பொதுத்தேர்தலின்போது செய்யாத அளவுக்கு, இப்போது 4 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இடைத்தேர்தல்களில் எந்த முதல்வரும் பிரச்சாரத்துக்கு செல்ல மாட்டார்கள். ஆனால், ரோடு ஷோவை நடத்தியிருப்பதால், விஜய்க்கு ஏதோ அச்சம் உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

    Advertisement

    டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவது இதனாலெல்லாம் ஓட்டுகள் எகிறாது.. ஒவ்வொரு கட்சிக்கும் அடிப்படை வாக்குகள் என்றிருக்கும்.. அதை மாற்ற முடியாது.. வேட்பாளர் பெயரில் அனுதாபம் இருந்தால், ஓரளவு வாக்குகள் உயரலாம். ஆனால், தாராபுரத்தில் வேட்பாளர்தான் அழுது, அனுதாபத்தை தேடி கொண்டிருக்கிறார்.

    சத்யபாமாவை ஏன் சேர்த்தார்கள்

    சத்யபாமாவை ஏன் தவெகவில் இணைத்து கொண்டார் என்பதற்கு சரியான காரணத்தை விஜய்யால் சொல்ல முடியவில்லை.. "எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து, அதிமுக - திமுக கூட்டணிக்கு முயற்சி செய்தார்கள், அதனால்தான் சத்யபாமா தவெகவுக்கு வந்தார்"என்று காரணம் சொல்கிறார் விஜய்..

    அப்படிப்பார்த்தால் தவெகவுக்கு ஆதரவு தந்த அனைத்து கூட்டணி கட்சிகளுமே, துரோகம் செய்தவர்கள்தானே? திருமா எப்படி வெற்றி பெற்றார்? காங்கிரஸ் 5 சீட் பெற்றது எப்படி? பாமக இன்று நடுநிலை வகிக்கிறது என்றால், அது அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியினால்தானே? அதனால் விஜய் சொல்லும் காரணம் எடுபடவில்லை.

    Advertisement

    திமுக - அதிமுக புரிதல்?

    மதுராந்தகம் திமுகவுக்கும். தாராபுரம் அதிமுகவுக்கும் என்று ஒரு பேச்சு உள்ளது.. இரு கட்சிகளுமே ஒரு புரிதலில் உள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் அப்படியொரு முடிவை எடுக்க மாட்டார்கள். அப்படி எடுத்தால் அது அவரவர் கட்சிக்கு குந்தகமாக போய்விடும்.

    கட்சிகளின் அடிமட்ட லெவலில் இப்படியொரு முடிவு இருக்கலாம். ஏனென்றால் இவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல்தான் முக்கியம்.. உதாரணத்துக்கு தவெக சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால், அவர் தவெக எம்எல்ஏவாகிவிடுவார்.. இவருக்கு கீழே குறைந்தபட்சம் 3 ஒன்றியம், பல பேரூராட்சிகள், 1 நகராட்சி, பஞ்சாயத்துகள் என அனைத்தும் அந்த தவெக எம்எல்ஏவுக்கு கீழேயே வந்துவிடும்..

    Advertisement

    இப்படியிருக்கும்போது, அங்கு ஏற்கனவே திமுக அல்லது அதிமுக சேர்மன்கள் இருந்தால், தவெக எம்எல்ஏவால் அவர்களுக்கு பல வழிகளில் இடைஞ்சலாக அமைந்துவிடும்.. தவெக வரக்கூடாது என்று நினைக்கிற பெரும்பாலான வாக்கு வங்கிகள் கிராமப்புறங்களில் அடங்கிவிடும்.. ஏனென்றால் அதுதான் உள்ளாட்சி தேர்தலுக்கான களம்.. இந்த அடிமட்ட இடங்களில், அதிமுக, திமுகவுக்குள் ஒரு இணக்கம் வரலாமே தவிர, தலைவர்களுக்குள் அப்படி வர வாய்ப்பில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK 1, DMK 1, TVK 0? Tea and Tractor Rides Won’t Boost Votes.. Tharasu Shyam’s Ground-Level Analysis