மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அதிமுக.. நாளை மறுநாள் கடைசி!

  • சென்னை: அதிமுக சார்பாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் 3 நாட்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும், மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் மாலை 6 மணிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. சட்டசபைத் தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற சத்யபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    ஒரு சட்டசபைத் தொகுதி காலியானால் அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறையாகும். இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடக்கவுள்ளன.

    இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இப்படியான சூழலில் தவெக சார்பாக மீண்டும் போட்டியிட மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சார்பாக யார் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் அதிமுக சார்பாக 2 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் மாலை 6 மணிக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அதிமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 16ஆம் தேதியாகும். இதனால் இந்த ஒரு வாரத்தில் அத்தனை கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கலை செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் வெற்றி தவெகவுக்கு மிகவும் முக்கியம் என்பதால், தவெக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபடும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    AIADMK: AIADMK Begins Issuing Application Forms for Madurantakam and Dharapuram Bypolls Today