எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாமல் கடந்து சென்ற எஸ்பி வேலுமணி.. கூச்சலிட்ட அதிமுக.. என்ன நடந்தது?

  • சென்னை: சட்டசபையில் அம்மா உணவகம் தொடர்பான விவாதத்தின் போது எஸ்பி வேலுமணி பேசிய போது, முன்னாள் முதல்வர் அண்ணன் என்று சொல்லிவிட்டு, எடப்பாடி பழனிசாமி என்று பெயரை சொல்லாமல் கடந்து சென்றார். அப்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லுமாறு கூச்சலிட்டனர்.

    Advertisement

    சட்டசபையில் பட்ஜெட் மீதானம் நடைபெற்று வருகிறது. அப்போது அதிமுக சார்பாக பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்களே.. அது பெயர் மாற்றம் தானா.. ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் திட்டம் இப்போது அண்ணன் சீர் திட்டமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதிமுகவின் பசுமை வீடு திட்டம் வெற்றி வீடு திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் விலையில்லா மிதி வண்டி திட்டம், மடிக்கணிணி திட்டம், மகளிருக்கான விலையில்லா ஆடுகள் திட்டம் என்று அனைத்தும் வேறு பெயரில் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா, திமுக, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தவெக ஆட்சியில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை.

    அதன் பெயரை மாற்றாமல் செயல்படுத்தி வருகிறோம். அதற்கான நிதியை ஒதுக்கி இருக்கிறோம். 5 ஆண்டுகளாக அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை என்று தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், அம்மா உணவகம் என்பது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டது.

    Advertisement

    அதே பணியாளர்களை கொண்டே அந்த அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டது. நகராட்சி நிதியை கொண்டு தான் இயங்கி வருகிறது. அந்த துறையை நான் தான் கவனித்து வந்தேன் என்று தெரிவித்தார். அப்போது எஸ்பி வேலுமணி பேசுகையில், திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படவில்லை. நிதி ஒதுக்கவில்லை என்று கே.என்.நேரு சொன்னார்கள்.

    அதிமுக ஆட்சியின் போது 2018ல் அண்ணன் இருக்கும் போது ரூ.100 கோடி நிதி தனியாக ஒதுக்கப்பட்டது. அந்த நிதி மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். அப்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூறுமாறு கூச்சலிட்டனர். ஆனாலும் எஸ்பி வேலுமணி அதனை கடந்து சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

    English Summary

    AIADMK: AIADMK MLAs Demand SP Velumani Name Edappadi Palaniswami During Assembly Amma Canteen Debate