“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!

  • சென்னை: "அதிமுகவிற்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவும் தவெகவும் ஒன்று தான். அதிமுக எனும் கப்பல் மூழ்கவில்லை. அதனை விஜய் மூழ்க விடமாட்டார்" என மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார்.

    Advertisement

    மதுராந்தகத்தில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தவெக ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள் உள்ளனர். இதற்கு முன் நடந்திருக்கிறதா? சமூக நீதி என சொல்லக்கூடிய திமுக எந்த இடத்தில் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்தது? தேர்தலுக்கு முன்பாக எம்.ஜிஆர்-க்கு என்ன கொடுமை செய்தார்களோ அதை போல முதல்வர் விஜய்க்கும் செய்தது திமுக.

    Advertisement

    கவர்ச்சியால் வெற்றி பெற்றோம் என சொல்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 50 வருட அரசியல்வாதி உங்களுக்கு ஏன் அந்த கவர்ச்சி இல்லை? தைரியம் இருந்தா.. தில்லு இருந்தா.. இந்த தேர்தலுக்கு திமுக சோசியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று காண்பிக்க சொல்லுங்க.

    அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார். அதிமுக எனும் கப்பல் மூழ்கவில்லை. அதனை விஜய் மூழ்க விட மாட்டார். தமிழக அரசியலில் தீண்டாமையை ஒழித்தவர் விஜய். ஜாதி,மத அரசியல் ஒழிக்கப்பட்டுள்ளது. அதிமுகவும் திமுகவும் ஒன்றாகிவிட்டன. மாற்று கட்சியில் இருந்து வரும் தொண்டர்களை தவெகவில் இணைத்துக்கொள்வோம்.

    Advertisement

    இப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தவெக தயாராக உள்ளது. திருமாவளவனுக்கும் தவெகவிற்கும் சண்டை போல உருவாக்குகிறார்கள். விசிகவால் தவெகவிற்கு எந்த ஆபத்தும் வராது என்று திருமாவளவன் கூறினார். எங்களுடைய ஆதரவு முழுமையாக இருக்கும் என்று திருமாவளவன் கூறினார்.

    இந்த ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று அமைச்சரவையை விஜய் உருவாக்கவில்லை. அதிமுக என்னும் கப்பலை விஜய் மூழ்க விட மாட்டார். அமைச்சரவையில் சேர்ப்பது ஆட்சி அதிகாரத்திற்கான பாதுகாப்புக்கு இல்லை. நாளை தேர்தல் வந்தாலும் தனியாக நிற்க விஜய் தயாராக உள்ளார். 30 நாள் ஆட்சியில் 30 வருடம் திமுக செய்யாததை விஜய் செய்துள்ளார்" எனப் பேசினார்.

    Advertisement

    மேலும் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "இன்னைக்கு இந்த மேடையில... நான் இங்க வரும்போது பார்த்தேன், 'மாற்றுக்கட்சியினர் இணையும் விழா' அப்படின்னு போர்டு வச்சிருந்தாங்க. ஆனா, எனக்கு என்ன தோணுச்சுன்னா... இது மாற்றுக்கட்சியினர் இணையும் விழா கிடையாது. தமிழக வெற்றிக் கழகத்தின் 'வெற்றி விழா' ஆரம்பமாகிவிட்டது என்பதற்கான முதல் படி தான் இது!

    ஏன்னா, இன்னைக்கு மதுராந்தகம் தொகுதியில இருந்து இவ்வளவு பெரிய கூட்டமா வந்து இங்க இணைஞ்சிருக்கீங்க. மரகதம் குமரவேல் பேசும்போது சொன்னாங்க... அவங்க பட்ட கஷ்டங்கள், அவங்களுக்கு அதிமுகவில் நடந்த துரோகங்கள் எல்லாத்தையும் பத்தி சொன்னாங்க. நான் அவங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு தான் சொல்லிக்க ஆசைப்படுறேன்.

    Advertisement

    துரோகங்கள் எங்கெல்லாம் நடக்குதோ, அங்கெல்லாம் ஒரு புதிய மாற்றம் பிறக்கும். அந்த மாற்றம் தான் இன்னைக்கு நம்ம தலைவர் வடிவில், தமிழக வெற்றிக் கழகமா இங்க நிக்குது.

    அதிமுக, திமுக-ன்னு இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செஞ்சு, இந்த தமிழ்நாட்டை எந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

    ஆனா, நம்ம தளபதி விஜய், மக்களுக்காக... மக்களுடைய நலனுக்காக மட்டுமே இந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறா அவங்களுடைய ஒரே நோக்கம் என்னன்னா, இந்த தமிழ்நாட்டுல இருக்கிற கடைசி மனிதனுக்கும் எல்லா நன்மைகளும் போய் சேரணும் அப்படிங்கிறது தான்.

    Advertisement

    இன்னைக்கு தவெக-வில் இணையறதுக்காக வந்திருக்கிற மரகதம் குமரவேல் அவர்களையும், அவங்களோடு வந்திருக்கிற அத்தனை பேரையும் நான் வருக, வருக என வரவேற்கிறேன்.

    நம்ம எல்லாரும் சேர்ந்து, தலைவருடைய கரத்தை வலுப்படுத்தணும். வரும் சட்டமன்றத் தேர்தல்ல, தமிழ்நாட்டுல ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சியை நாம் ஏற்படுத்தணும். அதுக்கு உங்களுடைய ஆதரவு எப்பவும் தலைவருக்கு இருக்கணும்னு கேட்டுக்கிறேன். தலைவர் வழி நடப்போம்! தமிழகத்தை மீட்போம்" என்றார்.

    English Summary

    "Edappadi Palaniswami has betrayed the AIADMK. The AIADMK and TVK are one and the same. The ship named AIADMK has not sunk, and Vijay will not let it sink," said Minister Aadhav Arjuna at an event where members from other parties joined the TVK.