முடிஞ்சா எங்களை தூக்குங்க.. எடப்பாடிக்கு சவால் விட்ட 10 எம்எல்ஏக்கள்.. செப்டம்பர் 8-ல் பலே ஆபரேஷன்

  • சென்னை: எடப்பாடி பழனிசாமி வழங்கிய டம்மி பதவிகளால் அப்செட்டான வேலுமணி அணியினர், இப்போது தங்களின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அதாவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் சிக்காமல் இபிஎஸுக்கு செக் வைத்து, தவெக அரசை நேரடியாக ஆதரிப்பதற்காக சட்டமன்ற பட்ஜெட் தொடரைப் பயன்படுத்தி புது வியூகத்தை இவர்கள் வகுத்துள்ளார்களாம்.. இதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

    Advertisement

    2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு பெரிய அதிர்ச்சியை தொண்டர்களுக்கு தந்துவிட்டது.. இந்த தொடர் தோல்விகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம் எனக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தது எஸ்.பி.வேலுமணி தரப்பு.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ், அவர்களது கட்சி பதவிகளை பறித்தார். ஆனால் பறிக்கப்பட்ட அதிகாரமிக்க பதவிகளுக்குப் பதிலாக தற்காலிக மற்றும் டம்மி பதவிகள் வழங்கப்பட்டதால், வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அப்செட் ஆனார்கள்.. இதனால் இந்த 2 தரப்பிற்கும் இடையே நீடித்து வந்த உள்கட்சி மோதல் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல்தான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

    அதாவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு முரண்பட்டு நிற்கும் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உட்பட 10-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும், அவர்களின் ஆதரவு எம்எல்ஏக்களும் இனி "தனி அணியாக' இயங்கலாம் என அதிரடி முடிவெடுத்துள்ளார்களாம்..

    Advertisement

    கட்சித் தாவல் நடவடிக்கை

    தனக்கு எதிராக செயல்படும் இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமாக மாறியுள்ளது.

    எனவேதான், எடப்பாடி பழனிசாமி பிரயோகிக்க நினைக்கும் கட்சி தாவல் தடைச்சட்டத்தை முற்றிலும் நீர்த்துப்போக செய்ய வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் புது ஐடியா ஒன்றை திட்டமிட்டுள்ளனர். இப்போது நடந்து வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 8ம் தேதி வரை ஏறத்தாழ 1 மாத காலம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வழக்கம்போல் வெளிநடப்பு செய்ய வாய்ப்புள்ளது.

    Advertisement

    எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் புது வியூகம்

    அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யும் வேலுமணி அணியினர், எடப்பாடி தரப்பினர் மீண்டும் அவைக்குள் திரும்பாத சூழலில், தாங்கள் மட்டும் மீண்டும் சட்டமன்றத்திற்குள் சென்று கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, அவைக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக செயல்பட முடிவெடுத்துள்ளனர்.

    மேலும், சட்டமன்ற வளாகத்திலேயே முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது தொகுதிச் சார்ந்த கோரிக்கை மனுக்களை அளிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.. இத்தகைய நகர்வுகள் எடப்பாடி பழனிசாமியை கண்டிப்பாக எரிச்சலடையச் செய்யும் என்றும், "முடிந்தால் எங்களைக் கட்சியிலிருந்து நீக்குங்கள்" என்று அவருக்கு பகிரங்க சவால் விடலாம் என்பதும் அவர்களின் கணக்காக உள்ளது.

    Advertisement

    கொறடா உத்தரவை மீறினால்?

    கொறடா உத்தரவை மீறினால் மட்டுமே கட்சி தாவல் தடைச் சட்டம் பாயும் என்பதால், அதனை எடப்பாடியால் பயன்படுத்த முடியாதவாறு அனைத்து சட்ட சிக்கல்களையும் தவிர்க்கும் சூழல்கள் குறித்து தீவிரமாக விவாதித்துள்ளனர். கட்சியிலிருந்து தங்களை நீக்கினால் எம்.எல்.ஏ பதவி பறிபோகாது என்பதால், அதன்பிறகு நேரடியாகவே தவெக அரசை ஆதரிக்கலாம் என்ற நோக்கிலேயே இந்த திட்டமிடல் அரங்கேறியுள்ளதாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

    - எழில்

    English Summary

    AIADMK Crisis! What Happened Between Edappadi Palaniswami and the 10 MLAs?