பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது

  • சென்னை: சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் இன்று காலை முதலே பரபரப்பாக காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் தொண்டர்களின் கூட்டம், கார்களின் அணிவகுப்பு என ஏரியாவே அதிர்ந்து கொண்டிருக்கிறது. தவெகவில் இணைய அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகளை தவெக அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அதற்கு மேல் பரபரப்பு பனையூரில் ஏற்பட்டுள்ளது.. என்ன நடந்தது?

    Advertisement

    ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு மெகா ஆபரேஷன் பனையூரில் அரங்கேறிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவின் முக்கிய விக்கெட்டுகள் மொத்தமாக தவெக கூடாரத்திற்குள் தஞ்சம் புகப்போகிறார்கள் என்ற தகவல் தான் இப்போது தீயாய் பரவி வருகிறது.

    Advertisement

    ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் தவெகவில் இணையவுள்ளதாக ஒரு பலத்த தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை கிளப்பியது... ஆனால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகிய இருவருமே நேரடியாக பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை விசிட் அடித்துள்ளனர்.

    இவர்கள் காரை விட்டு இறங்கியதும் அங்கிருந்த தவெக நிர்வாகிகள் கொடுத்த வரவேற்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.. முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோருடன், இன்னும் சில முக்கிய தலைகளும் லைனில் இருக்கிறார்கள்.

    Advertisement

    குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகியோரும் தங்களது ஒட்டுமொத்த ஆதரவாளர்களுடன் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைய வந்திருப்பதாக தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், எம்.சி.சம்பத் தலைமையில் மட்டுமே சுமார் 500 பேர் தவெக கட்சியில் இணைய போவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் ஒருபக்கம் என்றால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜ், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ராஜமுத்து மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் போன்ற டாப் லெவல் முக்கிய புள்ளிகள் அனைவரும் தவெகவில் இணையப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தவெகவில் இணைவதற்காக அத்தனை அதிமுக நிர்வாகிகளும் காலை 10 மணிக்கே பனையூருக்கு வந்துவிட்டார்கள்.. ஆனால், தவெக அலுவலகத்திற்குள் அதிமுக நிர்வாகிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லையாம்..

    இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள், தவெக அலுவலக பின்வாசல் வழியாக செல்ல முயன்றுள்ளனர்.. கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டதால் அங்கு திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்லாமல் தவெக அலுவலகத்தில் அனுமதிக்கப்படாத அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.. எப்படியாது 11.30-மணிக்குள் தவெகவில் இணைந்துவிட வேண்டும் என்று நினைத்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக தெரிகிறது.

    English Summary

    AIADMK Leaders Try Secret Backdoor Entry Into TVK Office! Heated Face-off With Police.. What’s Happening At Vijay's HQ?