சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி அக்கட்சியின் சில எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களின் எம்.எல்.ஏ பதவியை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்தார். ஆனால், தகுதிநீக்க மனு நிலுவையில் இருந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். அவர்கள் கடிதம் கொடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் ஆளும் தவெக கட்சியில் இணைந்தனர். பின்னர் மேலும் இரு எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டு, மொத்தம் 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 190(3)(b)-ன் படி, ஒரு மக்கள் பிரதிநிதி ராஜினாமா கடிதம் கொடுத்தால், அவர் அதை சுயவிருப்பத்தின் பேரில்தான் கொடுத்தாரா அல்லது ஏதேனும் மிரட்டல், ஆதாயம் காரணமாக கொடுத்தாரா என்பதை சபாநாயகர் முழுமையாக விசாரிக்க வேண்டும். எம்.எல்.ஏ-க்கள் மதியம் 2.30 மணிக்கு ராஜினாமா கடிதம் தருகிறார்கள். மாலை 3.55 மணிக்கே அதை ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வருகிறது. கடிதம் கொடுத்த உடனே அவர்கள் ஆளும் கட்சியில் இணைகிறார்கள். இவ்வளவு குறுகிய நேரத்தில் சபாநாயகர் எப்படி உண்மையை விசாரித்து திருப்தி அடைந்திருக்க முடியும்? கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பதவி இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இந்த ராஜினாமா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, முறையான விசாரணை இல்லாமல் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டசபைச் செயலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பின்வரும் விளக்கத்தை முன்வைத்தனர்: எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரை நேரில் சந்தித்துதான் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தனர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாக முன்வந்து பதவியை விட்டு விலகும்போது, அதை ஏற்க வேண்டியது சபாநாயகரின் கடமை. யாரையும் கட்டாயப்படுத்தி பதவியில் நீடிக்க வைக்க முடியாது. எம்.எல்.ஏ-க்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் சொந்த விருப்பத்தில்தான் முடிவெடுத்தார்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே ராஜினாமா ஏற்கப்பட்டது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். சபாநாயகர் ஒரு எம்.எல்.ஏ-வின் ராஜினாமாவை ஏற்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா, சபாநாயகர் நடத்திய விசாரணை போதுமானதா, அல்லது இந்த ராஜினாமா ஏற்பு ரத்து செய்யப்படுமா என்பது குறித்த முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று அறிவிக்கிறது. அதிலும் மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் முடிவு வரும் அதே நேரத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த எம்எல்ஈக்களின் ராஜினாமா செல்லாது என்று அறிவிக்கப்பட்டால்.. இன்று வரப்போகும் தேர்தல் முடிவு செல்லுபடியாகுமா என்ற சட்ட ரீதியிலான கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது. தமிழக அரசியல் அரங்கிலும் சட்ட வல்லுநர்கள் மத்தியிலும் இந்தத் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.என்ன நடந்தது? வழக்கின் பின்னணி
நீதிமன்றத்தை நாடிய அதிமுக
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வைத்த முக்கிய வாதங்கள்:
சபாநாயகர் தரப்பு விளக்கம் என்ன?
உயர்நீதிமன்றத்தின் விசாரணை