குறுக்க இந்த எடப்பாடி வந்தா? முதல் ஆளாக களத்தில் இறங்கிய அதிமுக! இடைத் தேர்தலுக்கு எல்லாம் ரெடி!

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு அமைந்திருக்கும் நிலையில் முதல் அக்னி பரிட்சையாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சியாக இருக்கும் தவெகவும் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் அமைதியாக இருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே விருப்ப மனு பெரும் அறிவிப்பை அறிவித்திருக்கிறது அதிமுக. இதன் மூலம் கட்சி இன்னும் சுறுசுறுப்பாய் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி வெளிக்காட்டி இருக்கிறார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அதே நேரத்தில் இதே வேகம் தேர்தலின் போதும் எதிரொலிக்க வேண்டும் எனவும் சொல்லுகின்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழக அரசு முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து இருக்கிறது. ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மிக முக்கியமாக குதிரை பேர குற்றச்சாட்டு விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியது.

    Advertisement

    தேர்தல் முடிவடைந்த உடன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவளித்தன. இதனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.

    அதிமுக

    தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் 20க்கும் மேற்பட்டோர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

    Advertisement

    எம்எல்ஏக்கள் ராஜினாமா

    முன்னதாக திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தனர்.

    இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படையில் 7 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுத்தன.

    Advertisement

    இடைத்தேர்தல்

    தமிழக தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சுச்சரிக்கை ஒன்றினை அனுப்பி இருந்தார். அதில், தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அட்டவணை அறிவிப்பை வெளியிடலாம் என்பதால், தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை முடிக்க வேண்டும் எனவும் ஜூன் மாதத்துக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மதுராந்தகம் - தாராபுரம்

    இடையில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. மேலும் 2 விஜயபாஸ்கர்கள் தரப்பு மேல்முறையிடும் செய்துள்ளது. இதனால் 5 தொகுதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    Advertisement

    வேட்பு மனு தாக்கல்

    வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், 9ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 17ஆம் தேதியும் வேட்பு மனுவைத் திரும்ப பெற கடைசி நாளாக 19ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி

    இந்த நிலையில் இந்த 2 தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவார்கள் விருப்பமான தாக்கல் செய்யலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். செப்டம்பர் 10ஆம் தேதி வரை விருப்பமுள்ள விநியோகம் செய்யப்படும் எனவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்று 10ஆம் தேதிக்குள் மனுக்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

    Advertisement

    விருப்பமனு

    எதிர்க்கட்சியான திமுகவும் அமைதியாக இருக்கும் நிலையில் திடீரென அதிமுக முதல் முறையாக விருப்பமனு பெறும் பணிகளை தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் கட்சி இன்னும் உயிர்ப்போடும் சுறுசுறுப்போடும் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமி வெளிக்காட்டி உள்ளார் எனவும், இதே வேகத்தையும் விவேகத்தையும் தேர்தலின் போதும் காட்ட வேண்டும் என கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

    English Summary

    AIADMK opens applications for candidates in Madurantakam and Dharapuram bypolls, signaling an early campaign push under Edappadi Palaniswami.