“தவெகவுக்கு தாவிய மீன் கடை பூனைகள்.. இரவல் ஆட்சி நடத்துகிறார் விஜய்”.. அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கு

  • சென்னை: தவெகவுக்கு தாவியவர்களை மீன்கடை பூனைகள் என அதிமுக எம்.பி இன்பதுரை விமர்சித்துள்ளார். செயற்கையாக காலி இடங்கள் உருவாக்கப்பட்டதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், சபாநாயகர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டார் என்றும் இன்பதுரை விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்​தார். இந்த நிலையில் திருச்சி கிழக்​கில் அவர் வெற்றி பெற்​றதை எதிர்த்​து, அத்​தொகுதி திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ் தேர்​தல் வழக்கு தொடர்ந்​தார்.

    Advertisement

    இதே​போல, கரூரில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தவெக வேட்​பாளர் வி.பி.ம​தி​யழகன், விராலிமலை​யில் சி.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் கே.கே.செல்​லப்​பாண்​டியன், பெருந்​துறை​யில் ஜெயக்​கு​மாரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் தோப்பு வெங்​க​டாச்​சலம் ஆகியோர் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். அம்​பாச​முத்​திரத்​தில் இசக்கி சுப்​பையா (அதி​முக) வெற்றி பெற்​றது செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி தொகுதி வாக்​காளர் காந்​தி​ம​தி​நாதன் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

    இதற்​கிடையே, அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 பேரும் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர். இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள மேற்​கண்ட 5 தொகு​தி​களுக்​கும் இடைத்தேர்​தல் நடத்த தடை விதிக்​கு​மாறும், தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடு​மாறும் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்​தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகு​தி​களுக்கு இடைத்தேர்​தலை நடத்​துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செல​விடப்படும், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள 5 தொகு​தி​களுக்கு இடைத்தேர்​தல் தொடர்​பான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக எம்.பி இன்பதுரை, "செயற்கையாக காலி இடங்கள் உருவாக்கப்பட்டதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இசக்கி சுப்பையா பதட்டத்துடன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் முன்பே அழைத்து விசாரித்திருக்க வேண்டும். சபாநாயகர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டார். சபாநாயகர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

    Advertisement

    தவெகவுக்கு தாவியவர்கள் மீன் கடை பூனைகள். விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார் முதல்வர் விஜய். தவெகவுக்கு ஓட்டு போடக்கூடாது என்பதற்காகவே விசிக, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் வாக்களித்தனர். இரவல் வாங்கி ஆட்சி நடத்தும் விஜய் ஒரு வாடகை சக்தி" என விமர்சித்துள்ளார்.

    English Summary

    AIADMK MP Inbadurai has criticized those who defected to TVK, likening them to "cats at a fish market." He further criticized the Speaker for acting against the Constitution and stated that the by-election was stayed because vacancies had been created artificially.