Section 77 என்ன சொல்லுது தெரியுமா? நட்சத்திர பேச்சாளர் பட்டியல்.. தவெகவை வெளுத்து வாங்கிய இன்பத்துரை

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் வெளியிட்டிருந்த நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து அந்த பட்டியலில் இருந்து கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்களை நீக்கி உள்ளது தவெக தலைமை. இந்த நிலையில் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் என்பது தவெகவின் உட்கட்சி அறிவிப்பு அல்ல என அதிமுக எம்பி இன்ப துரை விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்கு பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

    Advertisement

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தற்போது வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் என இந்த தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலகிறது.

    இடைத்தேர்தல்

    முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து அந்த தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். இதற்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை அந்த கட்சியின் தலைமை வெளியிட்டு இருந்தது. அதில் முதல்வர் விஜய் உள்ளிட்டோரது பெயர்களோடு, கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன், துரை வைகோ, ரவிக்குமார், காதர் மொய்தீ,ன் மாணிக்கம் தாகூர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

    Advertisement

    நட்சத்திர பேச்சாளர் பட்டியல்

    இதற்கு திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த பட்டியலில் இருந்து கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் என்பது என தவெகவின் உட்கட்சி அறிவிப்பு அல்ல என விமர்சித்துள்ளார் அதிமுக எம்பி இன்ப துரை.

    இன்பத்துரை

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," நினைத்து நினைத்து பெயர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் என்பது தவெக கட்சியின் உள்கட்சி அறிவிப்பு அல்ல; R.P. Act, 1951 - Section 77(1), Explanation 1 & Explanation 2 மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. Section 77(1), Explanation 2-ன் proviso படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் இறந்தாலோ அல்லது அந்த அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாமல் போனாலோ, அவருக்குப் பதிலாக மற்றொரு பெயரைச் சேர்ப்பது தொடர்பான சிறப்பு விதி உள்ளது.

    Advertisement

    தேர்தல் விதிமுறைகள்

    மேலும், நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் அறிவிக்கை வெளியான 7 நாட்களுக்குள் ECI மற்றும் சம்பந்தப்பட்ட CEO-விடம் தெரிவிக்கப்பட வேண்டும். முறையாகத் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கே Section 77-ன் சிறப்பு செலவுக் கணக்கு விதிகள் பொருந்தும். வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் போன்றோரை தவெக கட்சி தனது Star Campaigner பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ள நிலையில், அவர்கள் தவெக வேட்பாளர்களுக்காக மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தால், Section 77-ன் Star Campaigner செலவு விலக்கு அவர்களுக்குப் பொருந்தாது.

    தேர்தல் ஆணையம்

    எனவே, அந்தப் பிரசாரத்துடன் தொடர்புடைய செலவுகள் Section 77 மற்றும் ECI-யின் expenditure-monitoring விதிகளின்படி சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள முக்கிய சட்டநிலை. சட்டம் பேசட்டும்!" என கூறியுள்ளார்.

    English Summary

    AIADMK MP Inbathurai cites Section 77 while questioning TVK’s changes to its star campaigner list for Tamil Nadu bypolls.