சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நீதிமன்றத்தில் ஆஜராகனும்.. விடாப்பிடியாக நிற்கும் அதிமுக!

  • சென்னை: அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அக்கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு எந்த சலுகையும் கொடுக்க கூடாது என்றும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தவெக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்கு கூட்டணி கட்சிகளை நம்பிதான் இருந்தது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சமயத்தில் அதிமுக எம்எல்எக்கள் சிலர், கட்சியிலிருந்து கழன்று சென்று.. தவெகவில் இணைந்தனர். இதை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைகளும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து.. தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது அதிமுக. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் கிடக்கிறது. இந்த நேரத்தில்.. அரசியலமைப்பு சட்டம் 190(3)(b)-ன் படி எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல்.. சபாநாயகர் எப்படி ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியும்? என்று அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கை தொடுத்திருந்தார்.

    வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏதர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தரப்பில், "ராஜினாமா என்பது தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து எஸ்கேப் ஆவதற்கான வழியாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி செய்வது ஜனநாயக மாண்புக்கும், அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கும் எதிரானது.

    Advertisement

    எனவே ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சபாநாயகருக்கு, நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து எந்தவிதமான அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பும் கிடையாது. சபாநாயகருக்கு சலுகை எதையும் கொடுக்க கூடாது" என்று அதிமுக வாதங்களை முன்வைத்தது.

    இதையடுத்து.. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சபாநாயகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    JCD Prabhakar: A case filed by the AIADMK challenging Speaker J.C.D. Prabhakar's acceptance of the resignations of party MLAs came up for hearing today. The AIADMK has argued that no special concession should be granted to the Speaker in this matter and that he must appear in court.