நீ வேணா சண்டைக்கு வா.. கோதாவில் இறங்கிய எடப்பாடி & சண்முகம் டீம்! பரபரப்பான விழுப்புரம்! என்னாச்சு?

  • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவிலிருந்து கடந்த சில தினங்களாக சிவி சண்முகம் ஒதுங்கி இருக்கும் நிலையில், தற்போது அவரது ஆதரவாளர்கள் நேரடியாக மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச் செயலாளராக தலைமை ஏற்று நடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோற்றது.

    Advertisement

    தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி, பல ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து வந்த அதிமுக 2026 தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது அந்த கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சில சீனியர் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.

    அதிமுக உட்கட்சி மோதல்

    இதுவும் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதற்கு மேல் அதிர்ச்சியாக சட்டசபையில் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம், எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆதரவாக வாக்களித்தனர். அதற்கு முன்னதாகவே ஆட்சி அமைக்க விஜய் தடுமாறிய போது அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்த அணி கூறியது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. அதனால் தான் சட்டசபையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. இதற்கிடையே கட்சி கொறடாவின் உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர்கள் மீது கட்சி காவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் இடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மனுக் கொடுத்தது. அதன் பின்னர் நடந்த பேச்சு வார்த்தைகளை அவர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    எம்ஆர் விஜயபாஸ்கர்

    அதே நேரத்தில் போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். தற்போது வரை அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளர்கள் அந்தந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இதனிடையே எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தற்போது தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    எஸ்பி வேலுமணி

    ஆனால் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் அதிமுகவிலேயே தொடர்கின்றனர். எஸ் பி வேலுமணிக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், சிவி சண்முகத்துக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை. கட்சியில் இருக்கிறேனா இல்லையா என்பது கூட தெரியவில்லை என தனது அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார் சண்முகம்.

    நிர்வாகிகள் ஆலோசனை

    முன்னதாக தனது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும், கட்சியின் அலுவலக சாவியை எடப்பாடியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளரான பசுபதி தரப்பிடம் ஒப்படைத்தார் சண்முகம். அதற்கு பிறகு அடிக்கடி தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தற்போதைய அதிமுக மாவட்ட செயலாளரான பசுபதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    சிவி சண்முகம்

    ஏற்கனவே மாவட்டத்தில் உட்கட்சி பூசல் நடைபெற்று வரும் நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே திடீரென அங்கு வந்த சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் தங்களையும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். நாங்களும் அதிமுக தான் என கூறினர். ஆனால் பசுபதி தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சி.வி. சண்முகம்

    போலீசார் தங்களை அனுமதிக்கவில்லை எனக் கூறிய அவர்களிடமும் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் என்றாலும் நாங்களும் அதிமுகவில் தான் இருக்கிறோம் எங்களிடம் உறுப்பினர் அட்டை இருக்கிறது என கூறிய அவர்கள் வாக்குறுதி ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுவரை அதிமுகவிலிருந்து ஒதுங்கி இருந்த சண்முகத்தின் ஆதரவாளர்கள் தற்போது திடீரென கட்சியின் நிகழ்ச்சிக்கு வந்தது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களாக மாறிவிட்டார்களா அல்லது கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கும் முயன்றார்களா என்ற கேள்விதான் தற்போது அங்கு பேசப்படுகிறது.

    English Summary

    Fresh tensions erupt in AIADMK after CV Shanmugam supporters seek entry into a party meeting, exposing internal divisions.