எனக்குனே வருவீங்களா..ஆட்டைத்தை ஆரம்பித்த வேலுமணி - சண்முகம் & கோ! இருதலைக் கொள்ளி எறும்பாக எடப்பாடி!

  • சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது அதிமுக உட்கட்சி விவகாரம். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து எதிர்த்து பேசி வேதனையில் ஆழ்த்தி வருகின்றனர் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி & கோ. இதற்கிடையே சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என கூறி வரும் அவர்கள் தற்போது போட்டி பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.

    Advertisement

    ஏற்கனவே பல மாவட்ட செயலாளர்களிடம் கையெழுத்து பெற்று இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் நியமனங்கள் செல்லாது என நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க போகிறார்களாம் இந்த தகவலை கேட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர்.

    Advertisement

    அதே நேரத்தில் கட்சியை விட்டு இவர்களை நீக்கிவிட்டால் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஆனால் அது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியது போல் ஆகிவிடும் என்பதால் பொறுமை காக்கிறார் என்கின்றனர் அதிமுக உடன்பிறப்புகள்.

    அதிமுக

    'எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்' என்பது போல் தான் அதிமுக இருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்ற அந்த கட்சி 2016 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகும் கட்சியை பொதுச் செயலாளராக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் கொண்டு வந்த பிறகும், இந்த சோக நிலை தொடர்கிறது.

    Advertisement

    எடப்பாடி பழனிச்சாமி

    இதற்கிடையே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க எடப்பாடி விரும்பினார். ஆனால் சில பல காரணங்களால் அது கைவிட்டு போனது. தொடர்ந்து அதிமுக வழக்கம் போல் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலுக்கு பிறகாவது கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சை எடப்பாடி கேட்கவில்லை. இதை அடுத்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம், எம்ஆர் விஜய பாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    விஜயபாஸ்கர்

    மேலும், போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். தற்போது வரை அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளர்கள் அந்தந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்த சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தல் அவர்கள் மீண்டும் சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்கின்றனர்.

    Advertisement

    சிவி சண்முகம்

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவில் இன்னும் ஒரு அதிருப்தி கோஷ்டி இருக்கிறது. சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி தலைமையில் அந்த டீம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எம்எல்ஏக்களாக இருக்கும் சிவி சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இதில் வேலுமணி எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிப்பதில்லை.

    தமிழக வெற்றி கழகம்

    ஆனால் சிவி சண்முகம் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சட்டசபையில் மட்டுமல்லாது செய்தியாளர்கள் சந்திப்பிலும் சி.வி சண்முகம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்டு வருகிறார். முடிந்தால் பொதுக்குழுவை கூட்டுங்கள்.. முடிந்தால் எங்களை கட்சியில் விட்டு நீக்குங்கள் என பேசி வருகிறார். ஆனால் கட்சியை விட்டு நீக்கினால் அவர் எளிதாக தமிழக வெற்றி கழகத்தில் எம்எல்ஏ ஆக சேர்ந்து விடுவார்கள் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அதனை தவிர்த்து வந்தார்.

    Advertisement

    எஸ்பி வேலுமணி

    இதற்கிடையே தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்குழுவைக் கூட்ட சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி தரப்பு திட்டமிட்டு இருப்பதாக சொல்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவியில் நீக்க வேண்டும். அந்த பதவியில் சசிகலாவை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்களாம்.

    பொதுக்குழு - செயற்குழு

    இதற்காக ஏற்கனவே பல பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னதாகவே அவர்களை கட்சியை விட்டு நீக்கி விட்டால் பொதுக்குழுவை கூட்ட முடியாது என எடப்பாடி தரப்புக்கு சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் அப்படி நீக்கினால் அவர்கள் எளிதாக தமிழக வெற்றிக் கழகத்தில் எம்எல்ஏக்களாகவே சேர்ந்து விடுவார்கள். அமைச்சர்களும் ஆகிவிடுவார்கள். அப்போது நமக்கு நெருக்கடிதான் அதிகரிக்கும் என இருதலைக் கொள்ளி எறும்பாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள் .அதே நேரத்தில் எதிர் தரப்பு வேகமாக காய்களை நகர்த்தி வரும் நிலையில் என்ன நடக்கப் போகிறது? என ஆர்வத்தோடு கவனித்து வருகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

    English Summary

    AIADMK tensions rise as a rival faction reportedly plans a general council meeting, putting EPS under pressure.