GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக!

  • சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்த போது போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இளைஞரை பார்த்து, 'நீ நல்லா சாப்ட்ருக்க' என அமைச்சர் பேசினார். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, 'இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி' என விமர்சித்துள்ளது.

    Advertisement

    சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த தினம் வார இறுதி நாள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    அப்போது பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைமேடையில் பேருந்திற்காக காத்திருந்த பயணிகளிடம் சென்ற போக்குவரத்து துறை அமைச்சருடன் போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை, திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி, கும்பகோணம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை எனவும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராததால் நீண்ட நேரமாக காத்திருப்பதாக அமைச்சரிடம் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் நடைமேடையில் காத்திருந்த பயணிகளை எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டு முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யாத பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்ததால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    Advertisement

    குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் முன்பதிவு செய்த பேருந்து நீண்ட நேரமாகியும் வராததால் புகாரளித்த இளைஞரிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வாக்குவாதம் செய்தார். "தம்பி நீ நல்லா சாப்பிட்டப்பா.. நான் இன்னும் சாப்பிடலப்பா" என சம்பந்தம் இல்லாமல் பேசி, கேள்வி கேட்ட இளைஞருடன் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது அதிமுக ஐடி விங்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு. ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார். இல்ல புரியல.... "நீ நல்லா சாப்பிட்டிருக்க" ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது? GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க... இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள்.

    English Summary

    AIADMK criticises Minister Tamilan Parthiban after argument with passengers at Clambakkam bus terminus goes viral.