வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்!

  • சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

    Advertisement

    அமைச்சரவை மற்றும் வாரியத் தலைவர் பதவிக்காக எஸ்பி வேலுமணி அணியினர் இப்படி செய்கிறார்கள் என்று விமர்சித்தார். இந்த சூழலில் தவெக அமைச்சரவை அமைக்கப்பட்டது. காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் அமைச்சரவையில் இணைந்தனர். இதனால் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்தது.

    Advertisement

    இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதேபோல் பாலகிருஷ்ண ரெட்டி, நத்தம் விஸ்வநாதன், அருண்மொழிதேவன், திருத்தணி கோ.அரி, ரவி மனோகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் பக்கம் சாய்ந்தனர். இதனால் எஸ்பி வேலுமணி பக்கம் வெறும் 11 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர்.

    நாளுக்கு நாள் எஸ்பி வேலுமணி அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையை தங்கமணி மூலமாக நடத்தி வருகின்றனர். தற்போது எஸ்பி வேலுமணி தரப்பில் சில டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    அதன்படி அதிமுகவில் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும். அதிமுகவில் கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்க ஒரு குழு அமைக்க வேண்டும். குறிப்பாக கட்சியில் அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

    இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதவி இழந்தவர்களுக்கு பதவி கிடைக்கும் என்றும், கட்சி முடிவுகளை எடுக்க குழு அமைக்க வாய்ப்பில்லை.. அதனால் கட்சிக்கு எதிராக கொடுத்த புகார்களை திரும்ப பெற்று, கட்சியில் இணைந்து செயல்படுங்கள் என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் விரைவில் அதிமுகவில் இணைப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    AIADMK: SP Velumani Faction Drops Big Demands and Edappadi Palaniswami didn't accepted the Request