மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா?

  • சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உருவான உட்கட்சிப் பிரச்சினை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி அணிகளாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது மூன்றாக உடைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த குழப்பமான சூழலை தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு தனது பலத்தை அதிகரித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    Advertisement

    2026 தேர்தலில் அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சி வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.

    Advertisement

    இருந்த போது தனிப் பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியாகவு, எதிர்க கட்சியாகவும் இருந்த அதிமுக 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது,

    அதிமுக

    இதனால் தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிருப்தி குரல்கள் அதிகரித்தன. குறிப்பாக, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது, கட்சியில் ஒருதலைப்பட்ச முடிவுகள் எடுக்கப்படுவது, நீக்க நடவடிக்கைகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். இதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    வேலுமணி

    இதனால், கட்சிக்குள் மோதல் வெளிப்படையான போராட்டமாக மாறியது. இந்த நிலையில், வேலுமணி தரப்புக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, த.வெ.க. கூட்டணி அரசில் சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    ராஜினாமா

    இதனால், வேலுமணி அணிக்குள் ஏமாற்றம் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த சூழலில்தான், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
    மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை வழங்கிய பின்னர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

    Advertisement

    த.வெ.க

    இதன் மூலம், அ.தி.மு.க.வில் இருந்து நேரடியாக த.வெ.க.வுக்கு தாவிய முதல் எம்.எல்.ஏக்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்கு எதிர்காலத்தில் நடைபெறக் கூடிய இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் மூலம், சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மையை உறுதி செய்யும் நோக்கில் த.வெ.க. செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமி

    மறுபுறம், வேலுமணி அணியில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமார், சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ திலீபன் ஜெய்சங்கரன், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    17 ஆக சரிவு

    மேலும், கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக மன்னிப்பு கடிதமும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வேலுமணி அணியின் ஆதரவு எண்ணிக்கை தற்போது 17 ஆக குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் பிடி மீண்டும் வலுப்பெற்று வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே சமயம், வேலுமணி தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பலமாகும் தவெக

    தற்போது சபாநாயகர் முன் நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒருபுறம் கட்சிக்கு திரும்பி மன்னிப்பு கேட்கும் எம்.எல்.ஏக்கள் இருக்க, மறுபுறம் த.வெ.க.வில் இணையும் எம்.எல்.ஏக்களும் இருப்பதால், வேலுமணி அணியின் எதிர்காலம் மிகப் பெரிய சவாலில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்திக் கொண்டு த.வெ.க. தனது அரசியல் செல்வாக்கை வேகமாக விரிவுபடுத்தி வருவதாகவும் பேசப்படுகிறது.

    English Summary

    AIADMK faces fresh turmoil after MLA resignations and camp shifts strengthen Vijay-led TVK in Tamil Nadu politics.