எடப்பாடிக்கு ஆப்பு.. சசிகலாவின் டீல் பேசிய மணி&கோ? முந்திக் கொண்டாராமே மிதுன்? அதகளமான அதிமுக!

  • சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது வேலுமணி சண்முகம் தரப்பு. இதற்கிடையே அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே சசிகலாவை சந்தித்து பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமியின் மகனான மிதுன் என்கின்றனர் அதிமுகவினர்.

    Advertisement

    எஃகுக் கோட்டையாக ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக, தற்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஏற்கனவே பல அணிகளாக சிதறுண்ட நிலையில், பல முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு கிளம்பி விட்டதால் களையிழந்து விட்டது எம்ஜிஆர் மாளிகை.

    Advertisement

    குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, டிடிவி தினகரன், அதற்குப் பிறகு பன்னீர்செல்வம், தற்போது எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் என பலரும் பிரிந்து சென்று விட்டனர். இடையே சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டு வருகின்றனர்.

    அதிமுக

    2026 சட்டமன்ற தேர்தலின் போது அஇபுதமமுக என்ற கட்சியை தொடங்கிய சசிகலா அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தனது அணி வேட்பாளர்களை இறக்கினார். அவருடன் ராமதாஸும் சேர்ந்து கொள்ள, பல தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. தற்போது அமைதியாக இருக்கும் சசிகலா அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தி வருகிறாராம். இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் வேலுமணி - சண்முகம் தரப்பு சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவர்களது இடது வலது கரங்களாக தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம் போன்றோர் செயல்பட்டனர். சொல்லப் போனால் அவர்களால் தான் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அப்படி அவர்கள் வெளியேற காரணமாக இருந்த அவர்களே தற்போது மீண்டும் மூவரையும் கட்சியில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    சசிகலா

    சசிகலா கட்சிக்குள் வந்துவிட்டால் எடப்பாடி பழனிச்சாமியால் ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் அவர்களது எண்ணம். சசிகலா வந்துவிட்டால் ஏற்கனவே மறைமுகமாக அவரது ஆதரவாளர்களாக இருப்பவர்களும் ஏன் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் கூட அவருக்கு எதிராகவே திரும்பி விடுவார்கள் என்பது தான் இவர்களது கணக்கு. இதற்கிடையே வேலுமணியின் எம்எல்ஏக்கள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சிவி சண்முகத்தின் இல்லத்தில் வைத்து சசிகலாவை சந்தித்து பேசி இருக்கின்றனர்.

    Advertisement

    சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி

    மேலும் மூன்று முறை இந்த சந்திப்பு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நத்தம் மிஸ்வநாதன், கே.பி அன்பழகன் உள்ளிட்டோரும் பேசியதாக சொல்கின்றனர். அதே நேரத்தில் இவர்களின் பேச்சை நம்ப சசிகலாவும் தயாராக இல்லையாம். "எடப்பாடி பழனிச்சாமி உடன் சேர்ந்து கொண்டு என்னையே ஒதுக்கி வைத்துவிட்டு. நான் அழைத்த போது வராமல், தற்போது கட்சிக்குள் வரவேண்டும் என சொல்வது என்ன நியாயம்? முதலில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேருங்கள். அதற்குப் பிறகு நான் வருகிறேன்" என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.

    மிதுன்

    அதே நேரத்தில் கட்சி உடைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு காரணம் என சசிகலா சுட்டிக்காட்ட. நீங்கள் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அழைப்பு விடுத்தார்களாம் வேலுமணி & கோ. இந்த நிலையில் வேலுமணி சண்முகம் டீம்-ன் திட்டத்தை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் வேலுமணி தரப்பு சசிகலாவை சந்தித்ததற்கு முன்பாகவே அவரை சந்தித்து பேசினார் என்கின்றனர்.

    Advertisement

    சசிகலா கோபம்

    மேலும் "வேலுமணியின் பேச்சைக் கேட்க வேண்டாம்.. அவர்களால் தான் அப்பா உங்களைக் கட்சியில் விட்டு நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் நீங்கள் வந்தால் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்" என கூறினாராம். ஆனால் கோபமான சசிகலா, "இனி என்னை சந்தித்து பேச வேண்டாம். என்னை எதிர்த்து தீர்மானம் போட்டுவிட்டு தற்போது என்னிடமே பேச வந்திருக்கிறீர்களா? என கோபமாக பேசியதாக சொல்லப்படுகிறது.

    உண்மை என்ன?

    அதே நேரத்தில் "என்னால் இனி எந்த பிரச்சனையும் வராது" என சொன்னதாக தகவல்கள் உலாவுகின்றன. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலாவை சில தலைவர்கள் துருப்புச் சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டு இருப்பது உண்மைதான் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.

    English Summary

    Sasikala reportedly held talks with AIADMK leaders opposing Edappadi Palaniswami, while his son Mithun allegedly met her earlier.