கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!

  • சென்னை: தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கீழ்தளத்தில் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்த 10 நிமிடங்களில் மேல் தளத்திற்கு சென்று தவெகவில் இணைகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆதரித்து வாக்களித்தனர். இவர்கள் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு வாக்களித்ததால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் வழங்கப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவிநீக்கம் செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

    Advertisement

    இப்படியான சூழலில் திடீரென மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகிய அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதன் தொடர்ச்சியாக இசக்கி சுப்பையாவும் இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார்.

    இவர்கள் அனைவருமே எஸ்பி வேலுமணி அணியில் இருந்தவர்கள். இதனால் எஸ்பி வேலுமணி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக பார்க்கப்பட்டது. இதனிடையே எஸ்பி வேலுமணி அணியில் இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, அரி, ரவி மனோகரன் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்தனர். இதனால் ஓ.எஸ்.மணியன் திடீரென சட்டசபை செயலரை சந்திக்க வந்தார்.

    Advertisement

    அப்போது ஓ.எஸ்.மணியன் உடன் பாலகிருஷ்ண ரெட்டியும் இருந்தார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவளித்த பாலகிருஷ்ண ரெட்டி, தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக சட்டசபை செயலர் சீனிவாசனிடம் கடிதம் கொடுத்தார். இதன்பின் ஓ.எஸ்.மணியன் தரப்பில் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பி வந்த எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கடிதம் அளிக்கப்பட்டது.

    இதன்பின் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் இந்த கடிதத்தின் நகலை பேரவைத் தலைவரிடம் வழங்க வந்தோம். அவர் இல்லாததால் பேரவை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து குதிரை பேரம் நடக்கவில்லை என்று செங்கோட்டையன் சொன்ன கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    Advertisement

    அதற்கு ஓ.எஸ்.மணியன், கீழ்தளத்தில் மூன்று உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்கள். அடுத்த 10 நிமிடத்தில் மேல்தளத்தில் அமைச்சர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி, உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பெயர் என்ன? இதற்குப் பெயர்தான் குதிரை பேரம். தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK: TVK Engaged in Horse-Trading says AIADMK MLA OS Manian Drops a Bombshell on Vijay's Party