விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்?

  • சென்னை: தமிழக அரசியல் சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், அதிமுக இளம் தலைவர் இல்லாமல் தடுமாறி வருவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இளைஞர்களின் ஆதரவை தவெக பெற்றிருக்கும் சூழலில், திமுகவும் உதயநிதி மூலமாக இளைஞர்களை ஈர்க்க தீவிரமாக இறங்கியுள்ளது. மறுபக்கம் அண்ணாமலை இளைஞர்களை ஈர்க்க களமிறங்கியுள்ளார். ஆனால் அதிமுக இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் யார் என்பதே தெரியாமல் திணறி வருகிறது.

    Advertisement

    தமிழக அரசியல் சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், அதிமுக இளம் தலைவர் இல்லாமல் தடுமாறி வருவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இளைஞர்களின் ஆதரவை பெற்று தவெக ஆட்சியை பிடித்துவிட்டது. இதனால் திமுக உடனடியாக விழித்து கொண்டுள்ளது. இதனால் உதயநிதி மூலமாக இளைஞர்களை ஈர்க்க தீவிரமாக இறங்கியுள்ளது.

    Advertisement

    மறுபக்கம் அண்ணாமலை இளைஞர்களை ஈர்க்க தனித்து களமிறங்கியுள்ளார். ஆனால் அதிமுக இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் யார் என்பதே தெரியாமல் திணறி வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒற்றைத் தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

    ஆனால், "எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இளம் தலைவர் யார்?" என்ற கேள்விக்கு இன்றுவரை அக்கட்சியில் பதில் இல்லை. கட்சியின் தற்போதைய முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் 60 முதல் 70 வயதைக் கடந்தவர்களாகவே இருக்கின்றனர். திமுகவில் உதயநிதி, தவெகவில் விஜய், தனியாக அண்ணாமலை என இளம் தலைவர்கள் இளைஞர்களோடு நேரடியாக உரையாடி வருகின்றனர்.

    Advertisement

    அதிமுகவில் அத்தகைய ஒரு 'யூத் ஐகான்' இல்லாதது பெரும் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போன்ற ஒருசிலர் ஓரளவு அறியப்பட்டாலும், மாநில அளவில் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக ஈர்க்கக்கூடிய 'மாஸ்' அந்தஸ்து கொண்ட இளம் முகத்தை உருவாக்க எடப்பாடி பழனிசாமி தவறிவிட்டதாகவே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

    மாறிவரும் இந்த 2026 அரசியல் அலையில், புதிய வாக்காளர்களைக் கவர அதிமுக தன் உத்திகளை மாற்றியமைக்காத பட்சத்தில், அது கட்சியின் எதிர்கால வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் எழுச்சி அதிமுகவின் அடிமட்டத்தை உலுக்கி இருக்கும் நிலையில், அண்ணாமலை இன்னும் பாதிப்புகளை உருவாக்குவார் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    AIADMK: While Udhayanidhi, Vijay, and Annamalai Target Youth, AIADMK Gropes in the Dark for a Successor