சமாளிக்க முடியல சாமி.. ஏர் இந்தியா, இண்டிகோ எடுத்த ஷாக் முடிவு.. ஜூன் 1 முதல் விமானங்கள் ரத்து!

  • சென்னை: இந்திய விமானத் துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் முடிவை நாட்டின் மிகப் பெரிய இரு விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ எடுத்துள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 90 நாட்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.

    Advertisement

    விமான எரிபொருள் (ATF) விலை கடுமையாக உயர்ந்துள்ளதும், கோடைக்கால பயணிகள் தேவை குறைந்துள்ளதும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியும் இதை மேலும் மோசமாக்கியுள்ளது.

    Advertisement

    இந்திய விமானச் சந்தையில் 90 சதவீதத்திற்கும் மேல் பங்கு வைத்துள்ள இந்த இரு நிறுவனங்களின் முடிவு விமான பயணிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விமான எரிபொருள் விலை உயர்வு பெரும் சுமை

    ஏர் இந்தியா சார்பில் ஒரு உயர் அதிகாரி கூறுகையில், "ஒரு வாரத்துக்கு சுமார் 3,800 உள்நாட்டு விமானங்களை இயக்குகிறோம். முன்பு ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருள் (ATF) விலை ரூ.80,000 ஆக இருந்தது. தற்போது அது ரூ.1 லட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் விதிக்கும் VAT-இன் அடிப்படையில் இந்த விலை மாறுபடுகிறது. இந்த விலையில் விமானங்களை இயக்குவது நிதி ரீதியாக சாத்தியமற்றது. தற்போது குறைந்த கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்படுவதால் எரிபொருள் விலை உயர்வு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது" என கூறினார்.

    Advertisement

    இண்டிகோ நிறுவனமும் இதே போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி ஏர் இந்தியா 15 சதவீதம் வரை உள்நாட்டு சேவைகளைக் குறைக்கும் என்றும், இண்டிகோ 5 முதல் 7 சதவீதம் வரை குறைக்கும் என்றும் தெரிகிறது.

    எந்த வழித்தடங்கள் பாதிக்கப்படும்?

    மும்பை-அகமதாபாத், மும்பை-நாக்பூர், மும்பை-பாட்னா, மும்பை-போபால் உள்ளிட்ட வழித்தடங்களில் சேவைகள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.

    கோடை விடுமுறைக்குப் பிறகு பயணிகள் தேவை இயல்பு நிலைக்குத் திரும்பாதது மற்றொரு முக்கிய காரணம். மேலும், அமெரிக்கா - ஈரான் மோதல் காரணமாக சர்வதேச விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு இணைப்பு விமானங்களுக்கான பயணிகளும் குறைந்துள்ளனர்.

    Advertisement

    பொதுமக்கள் மீது ஏற்படும் தாக்கம்

    விமானப் பயணம் செய்யும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வணிக பயணிகள், மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய பயணம் செய்பவர்கள் மாற்று ஏற்பாடுகளைத் தேட வேண்டிய நிலை உருவாகும். விமானங்கள் குறையும் காரணத்தால் டிமாண்டுக்கு ஏற்ற விமானங்கள் மட்டுமே இயங்கப்படுவதால் விமான டிக்கெட் விலைகளும் உயர வாய்ப்பு உள்ளது.

    ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஹார்முஸ் நீரிணை பிரச்சனை ஆகியவை எரிபொருள் விலையை பாதித்து வரும் நிலையில், விமானத் துறையின் இந்த நடவடிக்கை பொருளாதாரத்தின் மற்ற துறைகளையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக விமான நிலையங்களுக்கான கேப் சேவைகள், விமான நிலைய ரீடைல் கடைகள் ஆகியவை பாதிக்கப்படும்.

    Advertisement

    விமானத் துறையின் சவால்கள்

    உலக அளவில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் உள்நாட்டு கோடைக்கால தேவை குறைவு ஆகியவை விமான நிறுவனங்களுக்கு பெரும் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ATF விலை உயர்வு மட்டுமின்றி, சர்வதேச விமான சேவைகள் குறைவும் உள்நாட்டு விமானங்களின் தேவையை பாதித்துள்ளது.

    இந்திய விமானத் துறை கடந்த சில ஆண்டுகளாக வேகமான வளர்ச்சியைக் கண்டு வந்த நிலையில், தற்போது இந்த இரட்டை சவால்களை எதிர்கொண்டுள்ளது. விமான நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் இந்த நடவடிக்கை, பயணிகளின் வசதிக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தினாலும், நீண்டகால நிதி நிலைத்தன்மைக்கு அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் விமானத் துறை இந்த சவால்களை எப்படி சமாளிக்கிறது என்பதை அடுத்த சில மாதங்கள் தீர்மானிக்கும். பயணிகள் முன்கூட்டியே பயணத் திட்டங்களைத் தீட்டி, மாற்று வழிகளை ஆராய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    பயணிகளுக்கு என்ன செய்ய வேண்டும்?

    பயணம் திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யவும், மாற்று வழிகளை (ரயில், பேருந்து) பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். டிக்கெட் விலை உயர்வும் ஏற்படலாம்.

    English Summary

    Air India and IndiGo, controlling over 90 percent of the domestic aviation market, will cut flight operations for 90 days starting June 1, 2026. This sudden reduction is driven by weak post-holiday demand and a massive surge in Aviation Turbine Fuel (ATF) costs exceeding 1 lakh rupees per kilolitre due to the ongoing US-Iran conflict. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் ஜூன் 1 முதல் 90 நாட்களுக்கு தங்களின் உள்நாட்டு விமானச் சேவைகளைக் குறைக்கின்றன.