தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்

  • சென்னை: தனது தாய் மோகினியின் இறுதிச் சடங்கிற்கு சிறப்பான வகையில் பாதுகாப்பு கொடுத்த காவல் துறையினரை கையெடுத்து கும்பிட்டு, நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார்.

    Advertisement

    நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி மணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அஜித் துபாயில் இருந்ததால் அவரது வருகைக்காக தாயின் இறுதி சடங்கு நேற்று நடைபெறவில்லை.

    Advertisement

    இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று சென்னை வந்த அஜித், தாயின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் இன்றைய தினம் பெசன்ட் நகர் மின்மயானத்தில் மோகினியின் இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அஜித்தின் தந்தை பாலக்காட்டு பிராமணர் என்ற முறையில் மோகினிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. தன்னை 10 மாதம் சுமந்த தாயின் உடலை பெசன்ட் நகரில் கடைசியாக ஒரு முறை அஜித் சுமந்தார். அப்போது அவரது முகம் முழுக்க சோகமே காணப்பட்டது.

    இதையடுத்து மின் மயானத்தில் மோகினியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தாய்க்கு தலை பிள்ளை என்பதால் அனில்குமார் இறுதி சடங்குகளை செய்திருப்பார் என தெரிகிறது.

    Advertisement

    மேலும் தனது தாயாரின் இறுதி சடங்கிற்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு அந்த துக்கத்திலும் அஜித் சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.

    இது போல் கடந்த 2023 ஆம் ஆண்டும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் இறப்பின் போதும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சிறப்பான பாதுகாப்பு கொடுத்து தந்தையின் இறுதி சடங்குகளை செய்ய எந்த ஒரு இடையூறும் இன்றி உதவினர். அப்போதும் அஜித்குமார், போலீஸாருக்கும் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.

    English Summary

    Actor Ajith Kumar expressed his heartfelt gratitude to police personnel for providing smooth and effective security arrangements during the final rites of his mother, Mohini. In a touching gesture, the actor folded his hands and thanked the officers who assisted in managing the funeral proceedings.