சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி இன்று வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். நடிகர் அஜித் குமார் துபாயில் இருந்த நிலையில் தாயாரின் மறைவு செய்தி கேட்டு சென்னை திரும்பினார். சற்று நேரத்துக்கு முன்பாக சென்னை விமான நிலையம் வந்த அஜித் குமார் சோகமாக கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி தனது தாயாரின் உடலை பார்க்க வீட்டுக்கு சென்றார்.
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி. இவருக்கு வயது 85. வயது மூப்பு காரணமாக உடல் நல பிரச்சனையை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் இன்று அவர் காலமானார்.
தாய் மோகினி மறைவின்போது நடிகர் அஜித் குமார் துபாயில் இருந்தார். இதையடுத்து உடனடியாக அவர் சென்னைக்கு புறப்பட்டார். விமானத்தில் துபாயில் இருந்து புறப்பட்ட அஜித் குமார் சற்று நேரத்துக்கு முன்பாக சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அஜித் குமாரின் முகம் சோகமாக இருந்தது. விமான நிலையத்தில் நின்றவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டபடி விஜய் காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.