தீபாவளி பண்டிகை! ரேஷன் கடைகளுக்கு இன்று லீவு இல்லை! சீக்கிரம் போய் முறுக்குக்கு பாமாயில் வாங்குங்க!

  • சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக வரும் திங்கள்கிழமை அன்று விடுப்பு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

    Advertisement

    இந்நிலையில், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு ஏதுவாக இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக நவம்பர் 21 ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் 34,916 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் வசதிக்காக தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ 100-க்கு 10 வகை காய்கறிகள், ரூ 200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    English Summary

    All Ration shops are functioning today in Tamil nadu ahead of Diwali. Instead of Today, shops will be closed on Monday.