'வெற்றி மடிக்கணினி திட்டம்' திமுக அரசு செய்ததை அப்படியே பின்பற்றிய தவெக அரசு! ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

  • சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும், வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு என ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியே ஒதுக்கப்பட்டது. திமுக அரசு ஒதுக்கிய அதே தொகையைத்தான் தவெக அரசும் ஒதுக்கியுள்ளது.

    Advertisement

    தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கான நிதி ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

    Advertisement

    திட்டத்தின் பெயர் மாற்றம்

    இந்த திட்டத்தின் பெயரும் வெற்றி மடிக்கணினி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியே ஒதுக்கப்பட்டது. திமுக அரசு ஒதுக்கிய அதே தொகையைத்தான் தவெக அரசும் ஒதுக்கியுள்ளது. தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ள இந்த மடிக்கணி திட்டத்திற்கு திமுக ஆட்சியில் உலகம் உங்கள் கையில் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றுவது போல மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் பெயரையும் விஜய் அரசு மற்றியுள்ளது. கடந்த 2025 - 2026 ஆம் நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 2026 -2027 ஆம் நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    உயர் கல்வித்துறை

    உயர் கல்வித்துறையை பொறுத்தமட்டில் கடந்த 2025 - 2026 ஆம் நிதி ஆண்டில் ரூ.8,494 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 2026 -2027 ஆம் நிதி ஆண்டில் கடந்த நிதி ஆண்டை விட 101 கோடி குறைவாக ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது

    தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டத்தினை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை கடந்த திமுக ஆட்சியும் செயல்படுத்தியது. அதனை பின்பற்றி தற்போது புதிதாக அமைந்த விஜய்யின் தவெக அரசும் வெற்றி மடிக்கணினி திட்டம் என்ற பெயரில் தொடர்கிறது.

    English Summary

    Finance Minister Maria Wilson has announced that the Tamil Nadu government has allocated ₹2,000 crore for the 'Vetri' (Victory) laptop scheme for college students. The name of the scheme for distributing laptops to college students has been changed.