ஆளூர் ஷாநவாஸ் லேபிள்.. பரந்தாமனின் கெத்து.. திமுக இந்த ரூட்டைதான் கையில் எடுக்க வேண்டும்: கோடீஸ்வரன்

  • சென்னை: "அதிகாரிகளின் பேச்சை மட்டும் நம்புவதை விடுத்து, கடினமாக தொண்டர்களின் உழைப்பை மதித்து, பழைய காலத்து திமுகவின் கண்ணியமான அரசியல் அணுகுமுறையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். கட்சித் தலைவர்கள் ஆட்சியின் சுகத்தை விடுத்து, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே மீண்டும் வலுவாகக் களமிறங்க முடியும்" என்று அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்க்குரல் சேனலில் கோடீஸ்வரன் பேசும்போது, "திமுக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சியினருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    திமுகவின் பின்னடைவுக்கு, கட்சித் தலைமை அதிகாரிகளை அதிகமாக நம்பியது, விளம்பரத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தொய்வு, அரசு ஊழியர்களின் அதிருப்தி போன்றவையெல்லாம் முக்கிய காரணங்களாக உள்ளன.

    மாவட்ட செயலாளர்கள்

    கட்சியை சார்ந்தவர்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால்தான், பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படாமல் நீண்ட காலம் அதே பொறுப்பில் இருப்பது, கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கும், வாரிசு அரசியலுக்கும் வழிவகுத்துள்ளது. கோஷ்டி பூசலும் ஒப்பந்ததாரர்களை மட்டும் நம்பியிருக்கும் போக்கும் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளன.

    சென்னையில் திமுக தோல்வியுற்றதும், கோவை பகுதியில் செந்தில் பாலாஜி கவனம் செலுத்தாமல் வெளியூர் அரசியலில் ஈடுபட்டதும் வியூக ரீதியான தவறுகளாகும். அதைவிட்டுவிட்டு தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியிலிருந்து விலகி செல்பவர்களை "பதவி வெறியர்கள்" என்று சாடுவதா? அதற்காக பதவி இருக்கும்போது மட்டும் கட்சியில் இருப்பவர்கள் உண்மையான விசுவாசிகள் கிடையாது.

    Advertisement

    திமுக கற்க வேண்டிய பாடம்

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சமாளிக்கும் அளவிற்கு திமுகவின் செயல்பாடுகளில் முன்பு இருந்த வீரியம் இப்போது இல்லை. கூட்டணி கட்சிகளின் சந்தர்ப்பவாத போக்கைத் திமுக தவிர்க்க வேண்டும்.

    ஸ்டாலின் இந்தத் தேர்தல் தோல்வியிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, அதிகாரிகளின் பேச்சை மட்டும் நம்புவதை விடுத்து, தொண்டர்களின் உழைப்பை மதித்து, பழைய காலத்து திமுகவின் கண்ணியமான அரசியல் அணுகுமுறையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். கட்சித் தலைவர்கள் ஆட்சியின் சுகத்தை விடுத்து, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே மீண்டும் வலுவாகக் களமிறங்க முடியும்,

    Advertisement

    பரந்தாமன், ஆளூர் ஷாநவாஸ்

    அதேபோல உள்ளாட்சி தேர்தலில் அரசியல் மேடைகளில் பண பலத்தை மட்டுமே நம்பியிருக்காமல், துணிச்சலாகவும் தெளிவாகவும் மக்களிடம் பேசக்கூடிய இளம் தலைவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்..

    உதாரணமாக பரந்தாமன் போன்ற பேச்சாளர்கள் சிறப்பாக முடிகிறது. இதற்கு காரணம், அவருக்கென சொந்தமாக கல்லூரி இல்லை, ஆலை இல்லை.. அதாவது மடியில் கனம் இல்லை.. அதனால் இவர்களது வீரிய மிக்க பேச்சு மக்களிடம் சென்றடைகிறது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பல பேர் பேசினாலும், ஆலூர் ஷாநவாசுக்கென்று பொது வெளியில் தனியான ஒரு லேபிள் உள்ளது.. ஏனென்றால், சமூக நிகழ்வுகள் மூலமாகவும், தங்கள் பேச்சாலும் மக்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.

    Advertisement

    எனவே அரசியலில் வெறும் பணத்தை மட்டுமே பிரதானமாகக் கருதாமல், மக்கள் மத்தியில் ஒரு பிணைப்பையும் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்பவர்களுக்கே எதிர்காலம் உண்டு" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Aloor Shanavas Label.. Parandhaman’s Political Strength.. DMK Should Take This Route, Says Kodeeswaran