விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி

  • சென்னை: விசிக முன்னாள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. விசிக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஷாநவாஸ், திமுக பக்கம் சாய முடிவு செய்திருந்தார். ஆனால் அடுத்தடுத்து இஸ்லாமிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதால், ஷாநவாஸ் தனிக்கட்சி ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய அரசியல் களம், எதிர்பாராத பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வரும் நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவின் முக்கியக் கூட்டணி கட்சியான விசிக உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    விசிகவின் முக்கிய முகமும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தனிக்கட்சி தொடங்கும் பாதையில் நகர்ந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பலத்த பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. சமூக வலைதளங்களிலும், ஊடக விவாதங்களிலும் விசிகவின் கொள்கைகளைத் தீவிரமாகப் பேசி, கட்சியின் 'ஸ்டார்' முகமாக வலம் வந்தவர் ஆளூர் ஷாநவாஸ்.

    2026 சட்டசபைத் தேர்தலில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு விசிக தலைமை மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. கட்சித் தலைமை எடுத்த இந்த முடிவால் ஷாநவாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையான அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவருக்குக் கட்சியில் மாநில முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட போதிலும், தேர்தல் களத்தில் ஓரங்கட்டப்பட்டதன் காயம் இன்னும் ஆறவில்லை என அவரது ஆதரவுக் கூடாரங்கள் முணுமுணுக்கின்றன. விசிக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஆளூர் ஷாநவாஸ் ஆரம்பத்தில் திமுக பக்கம் சாயலாம் என்று திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.

    திமுகவின் மேலிடத் தலைவர்களுடன் இதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்தன. ஆனால், தற்போதைய அரசியல் சூழல் மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், அடுத்தடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தல்களில் சில இஸ்லாமியக் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

    Advertisement

    இஸ்லாமியக் கட்சிகள் வெளியேறும் பட்சத்தில், நேரடியாக திமுகவில் இணைவது தனது அரசியல் எதிர்காலத்திற்குச் சரியாக இருக்காது எனக் கணித்துள்ள ஷாநவாஸ், தனது முடிவை மாற்றிக் கொண்டதாக விவரமறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இப்போதுள்ள இஸ்லாமிய கட்சிகளில், எஸ்டிபிஐக்கு மட்டுமே இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது.

    இதனை புரிந்து கொண்டிருக்கும் ஷாநவாஸ், தனிக்கட்சி தொடங்கும் திட்டத்திற்கு வந்துள்ளார். திமுக அல்லது விசிக நிழலில் பயணிப்பதை விட, தனக்கென ஒரு தனித்துவமான அரசியல் அடையாளத்தை உருவாக்க ஷாநவாஸ் திட்டமிட்டு வருகிறார். சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கக் கூடிய ஒரு புதிய முற்போக்கு அமைப்பையோ அல்லது தனிக்கட்சியையோ தொடங்கும் நோக்கில் அவர் தனது தீவிர ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளன.

    English Summary

    Aloor Shanavas: VCK Former MLA Aloor Shanavas Reportedly Planning to Launch a New Political Party