சென்னை: தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் ரீதியான அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களுக்கு மத்தியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக கர்நாடக மாநிலம் குடகு (கூர்க்) மலைக்குச் சென்றுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவும், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததும் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறுபுறம், அதிமுகவிலும் தேர்தல் முடிவுகள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இத்தகைய மிக முக்கியமான அரசியல் சூழலில், கடந்த சில மாதங்களாகத் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சற்று ஓய்வெடுப்பதற்காக இந்த சுற்றுலாப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக, கர்நாடக மாநிலம் கூர்க் எனப்படும் குடகு மலைக்கு சென்றுள்ளார். மு.க.ஸ்டாலினுடன் அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இந்தச் சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்குச் சென்றனர். அங்கிருந்து கார் மூலமாக மலைப்பிரதேசமான குடகு பகுதிக்கு சென்றனர். ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் வருவதால், அதற்கு முன்பாகவே ஜூன் 1 ஆம் தேதியன்று மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தோல்விக்குப் பிந்தைய அடுத்தகட்ட உத்திகள் மற்றும் உட்கட்சி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைகளுக்கு முன்பாக, இந்தச் சிறு ஓய்வு அவரது குடும்பத்தினருக்கும் கட்சித் தலைமைக்கும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.குடும்பத்தினர் உடன்
எப்போது ரிட்டர்ன்?