கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் மீண்டும் அமோனியா வாயு கசிவு.. திருவள்ளூரில் ஷாக்!

  • சென்னை: தனியார் கடல் உணவு பொருட்கள் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்டிருந்த அமோனியா வாயு கசிவு, 18 பேரின் உயிரை பறித்திருந்தது. இந்த நிறுவனத்திலிருந்து அமோனியா வாயுவை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இந்நிலையில், தற்போது மீண்டும் அமோனியா கசிவு ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    வாயுவை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் கவிதா.. லேசான கசிவுதான் ஏற்பட்டிருக்கிறது என்றும் இந்த கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னையை அடுத்துள்ள பெரியப்பாளையும் கன்னிகைப்பேர் பகுதியில்தான் இந்த தனியார் கடல் உணவு பொருட்கள் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கடன் உணவுகள் பதப்படுத்தப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்நிறுவனத்தில் கடந்த மாதம் 21ம் தேதி காலை வழக்கம்போல பணியாட்கள் வேலைக்கு வந்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழ தொடங்கியிருக்கின்றனர். அமோனியா வாயு கசிந்திருப்பது பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அதற்குள் வாயு கசிவு மொத்த பேரையும் பாதித்திருக்கிறது.

    Advertisement

    83 பேர் வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர். இதில் 7 பேர் வரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொருவராக உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 18 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் கடல் உணவுகளை குளிர்விக்க அமோனியா பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த வாயு செல்லும் வால்வு குழாயில் ஏற்பட்ட லீக்தான் உயிரிழப்புக்கு காரணம் என்றும் தெரிய வந்தது.

    சம்பவம் தொடர்பாக ஆலையை மூடி சீல் வைத்த அதிகாரிகள் தொடர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இப்படி இருக்கையில், ஆலையிலிருந்து பத்திரமாக வாயுவை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    இதையடுத்து ஆலையில் உள்ள அமோனியாவை பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த விபத்தை தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர் ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல், ஒப்பந்ததாரர் சுரேஷ் பிரபாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    English Summary

    ammonia gas leak at a private seafood processing plant claimed the lives of 18 people. Operations to remove the ammonia gas from the facility have now begun.