முதல்வர் விஜய்க்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் உருக்கமான வேண்டுகோள்

  • சென்னை: பாக்கி பணம் இன்னும் செட்டில் செய்யப்படாததால் சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு பெயராக ஒப்பந்ததாரர்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் முதல்வர் விஜய்க்கு அவர்கள் நேரடியாக தற்போது வேண்டுகோள் வைத்து போஸ்டர் வைத்துள்ளனர்.

    Advertisement

    ஆட்சி மாற்றத்தின் போது பழைய அரசின் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவது இயல்பான ஒன்றாக தமிழக அரசியல் வரலாற்றில் இன்று வரை தொடங்குகிறது . முந்தைய திமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேர்தல் நடத்திய விதிமுறைகள் மற்றும் புதிய ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டது ஒருபுறம் எனில், முந்தைய ஆட்சிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளின் தரத்தை ஆய்வு செய்வதும் ஒரு காரணமாக பரிந்து வருகிறது

    Advertisement

    இந்த சூழலில் பெருநகர சென்னை ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்ட பதிவில், "மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு:
    நாங்கள் செய்து முடித்த ஒப்பந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சியிடம் இருந்து 6 மாதங்களுக்கு மேல் நிதி வராததால் முன் எப்போது இல்லாத நிதி சிக்கலை சந்தித்து வருகிறோம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பில் தொகை வழங்கப்படாமல் இன்றைய தேதியில் ஒப்பந்ததாரர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் வழங்கப்படாமல் கடந்த 6 மாதங்களாக நிலுவையில் உள்ளது.

    கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாக பல இடங்களில் கடன் வாங்கி பணிகள் செய்துள்ளோம். பணம் வழங்காத நிலையில் கடனுக்கான வட்டி மற்றும் தவணை தொகையை ஒப்பந்ததாரர்களால் தொடர்ந்து செலுத்த முடியாமல் வாழ்வாதாரத்தை தொலைத்து ரொம்ப அபாயகரமான கட்டத்தில் மிகுந்த நெருக்கடியான நிலையில் இருக்கிறோம்.

    Advertisement

    உங்களின் நேரடி தலையீடு மற்றும் உதவி இல்லாமல் மாநகராட்சியால் எங்களின் கடனை அடைக்க முடியாது. எனவே தாங்கள் தயவு கூர்ந்து தலையிட்டு அரசின் வாயிலாக மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கொடுத்து மாநகராட்சியின் கௌரவத்தையும் எங்களின் வாழ்க்கையையும் காப்பாற்றும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai corporation Work payment delay issue: An earnest appeal from Greater Chennai Corporation contractors to Chief Minister Vijay,