அன்பில் மகேஷ் ஜாமீன் மனு.. ரூ.100 கோடி புகார் ரூ.800 கோடியானதா? நீதிமன்றத்தில் பரபரப்பு

  • சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

    Advertisement

    அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு ஜாமீன் கோரிய மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள் இதுதான்:

    Advertisement

    "கைது செய்யப்படுவதற்கு முன்பே மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜராகி 8 மணி நேரம் ஒத்துழைப்பு அளித்துள்ளார். 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தபோதும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். வழக்கின் புலன் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டார்.

    100 கோடி லஞ்சம்

    இந்த வழக்கில் முதலில் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் கூறினார்கள். தற்போது அதை ரூ.800 கோடியாக உயர்த்தியுள்ளனர். அரசகுமார்தான் ரூ.100 கோடி வசூலித்துள்ளார். அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பொய் கூறி அவரே பணத்தை வசூலித்துள்ளார்.

    Advertisement

    அரசகுமார் பணம் வசூலித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை தற்போது போலீசார் மாற்றியுள்ளனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும்போது, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

    அரசாணையில் கையெழுத்திட்டது யார்?

    தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையில் கையெழுத்திட்டது அரசு கூடுதல் செயலாளர்தான், அன்பில் மகேஷ் அல்ல. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்குவது என்பது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு. அதற்கான அரசாணை பல்வேறு துறை அதிகாரிகளைக் கடந்துதான் வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசகுமார் பொய் கூறியிருந்தால் அதற்கு அன்பில் மகேஷ் என்ன செய்ய முடியும்? அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறியவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டவர்களை போலீசார் ஏன் கைது செய்யவில்லை? அரசகுமார் செய்த தவறுக்கு அன்பில் மகேஷை ஏன் பொறுப்பாக்க வேண்டும்? லஞ்சம் கொடுத்தவர்கள் சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவரது தரப்பு வாதிட்டது.

    ஜாமீன் கிடைக்குமா?

    அன்பில் மகேஷ் செல்வாக்கு மிக்க நபர் என்று போலீசார் கூறினாலும், அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். அதேபோல், ஆதாரங்களையும் அழிக்க மாட்டார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

    Advertisement

    இந்த வாதங்களைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா என்பது தெரியவரும்.

    English Summary

    Anbil Mahesh Faces Rs.100 Crore Scam Allegations: 177 Schools Affected, Will He Get Bail Today?