குடும்பத்தோடு கொண்டாட முடியுமா தீபாவளியை? ஜாமீன் கேட்கும் மாஜி அன்பில் மகேஷ்! இன்று விசாரணை!

  • சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    Advertisement

    தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த திங்கட்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சென்னை ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    இந்த நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த கோரிக்கையின் பேரில் கடந்த 2ஆம் தேதி 3நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    Advertisement

    தீவிர விசாரணை

    இதனையடுத்து கடந்த 3 நாட்களாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாக அளிக்கப்பட புகார் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவை அனைத்திற்கும் அன்பில் மகேஷ் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிமன்ற காவல்

    அப்போது போலீஸ் காவலில் துன்புறுத்தல்கள் ஏதேனும் அளிக்கப்பட்டதா என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு காவல்துறை தன்னை துன்புறுத்தவில்லை என கூறிய அன்பில் மகேஷை 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Advertisement

    ஜாமீன் மனு விசாரணை

    இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னாள் அமைச்சர் என்பதால் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பார் எனவும், எனவே ஜாமீன் அளிக்க வேண்டும் என அவர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என அவரது ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    English Summary

    Former Tamil Nadu minister Anbil Mahesh seeks bail in a private school recognition fraud case as his plea comes up for hearing today.