சென்னை: பள்ளிகளில் பாதுகாப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்காக, கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.400 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பில் மகேஷை கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறைக்கு, வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை காவல்துறை வழங்கியுள்ளது. அன்பில் மகேஷின் வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் ஆய்வு செய்கிறார்கள்.
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் புகாரில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். திமுக மூத்த தலைவர்கள் இதை கண்டித்து வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் அன்பில் மகேஷ் கைதை திமுகவினரே கொண்டாடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. முதலமைச்சர் விஜய் சொன்ன 3 பைல்களில் அன்பிலுடையது முதல் பைல் என்று தவெகவினர் கூறினர்.
அன்பில் மகேஷ்க்கு, புழல் சிறையில் நவம்பர் 6 ஆம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அன்பில் மகேஷை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதன்படி அன்பில் மகேஷை 3 நாட்கள் காவல்துறை கஸ்டடியில் விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி அன்பில் மகேஷை காவல்துறையினர் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறார்கள். சிறையில் தூங்க விடாமல் இரவிலும் லைட் எரிய விட்டு டார்ச்சர் செய்கிறார்கள். மற்ற கைதிகளுக்கு வழங்கும் சப்பாத்தியே எனக்கும் கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட முடியவில்லை. எனக்கு 3-4 கிலோ எடை குறைந்துவிட்டது என்று அன்பில் மகேஷ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அன்பில் மகேஷ் சுமார் 5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி மிரட்டி வாங்கியதாக புகார் உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் அன்பில் மகேஷ் பேசிய வீடியோ அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அன்பில் மகேஷின் வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "அன்பில் மகேஷ் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்று விசாரணை நடத்துகிறாம்" என்றனர்.அன்பில் மகேஷ் வழக்கு
சிறையில் டார்ச்சர்
வங்கி கணக்கு ஆய்வு