18 செல்போன், 3 லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க்.. அன்பில் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன?

  • சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இருந்து 118 ஆவணங்கள், 18 செல்போன்கள் மற்றும் 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய நிலையில், அதன் முடிவில் 8 பென்டிரைவ், 2 ஹார்ட் டிஸ்க், ஒரு டேப்லெட், 1 ஐ பேட் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அன்பில் மகேஷ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    Advertisement

    திருச்சி, சென்னை உள்ளிட்ட அன்பில மகேஷ்க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதால், அங்கு காலை முதலே திமுகவினர் குவிந்தனர்.

    முன்னாள் அமைச்சார் கே.என்.நேரு நேரடியாக அன்பில் மகேஷ் வீட்டிற்கே வந்துவிட்டார். சோதனைக்கு பின் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செப்டம்பர் 18ஆம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க கூறியுள்ளனர். அன்றைய தினம் நேரில் சென்று விளக்கம் அளித்துவிட்டு திமுக வேட்பாளர்களுக்கான இடைத்தேர்தலில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

    Advertisement

    இந்த நிலையில் அன்பில் மகேஷ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி சோதனையில் அன்பில மகேஷ் வீட்டில் இருந்து 118 ஆவணங்கள், 18 செல்போன்கள் மற்றும் 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 பென்டிரைவ், 2 ஹார்ட் டிஸ்க், ஒரு டேப்லெட், 1 ஐ பேட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

    English Summary

    Anbil Mahesh: CCB Seized 118 Documents, 18 Phones, and 3 Laptops From Former DMK Minister Anbil Mahesh Residence