பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான நிதியை குறைத்த தவெக அரசு.. டேட்டா வெளியிட்டு ஆதங்கப்பட்ட அன்பில் மகேஷ்

  • சென்னை: கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என உரக்கச் சொல்லும் நம்முடைய கழகத் தலைவர் மு.க ஸ்டாலினின், திராவிடமாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது. ஆனால் இன்று கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    Advertisement

    தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி அமைத்த பிறகு விஜய் அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பல்வேறு திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளதோடு, கடந்த கால ஆட்சியில் செயல்படுத்த திட்டங்களை பெயர் மாற்றி தவெக அரசு அறிவித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    குறிப்பாக பள்ளி கல்வித்துறைக்கு கடந்த திமுக ஆட்சியில் ஒதுக்கப்படதை விட தவெக அரசு நிதியை குறைத்து இருப்பதாக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சாடியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது:-

    குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது

    "கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து" என உரக்கச் சொல்லும் நம்முடைய தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது இன்று வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவருகிறது.

    Advertisement

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு டேட்டா ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு

    2021 - 2022 நிதி ஆண்டு: ரூ.32,599 கோடி
    2022 - 2023: ரூ.38,895 கோடி
    2023 - 2024: ரூ.40,299 கோடி

    2024 - 2025: ரூ.44,042 கோடி
    2025 - 2026: ரூ.46,767 கோடி

    2026 - 2027 (இடைக்கால பட்ஜெட்): ரூ.48,534 கோடி
    2026 - 2027 (தவெக அரசு பட்ஜெட்): ரூ.44,527 கோடி

    Advertisement

    மரியவில்சன் அறிவித்தது எவ்வளவு?

    கடந்த 2025 - 2026 ஆம் நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 2026 -2027 ஆம் நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உயர் கல்வித்துறையிலும் குறைவு

    உயர் கல்வித்துறையை பொறுத்தமட்டில் கடந்த 2025 - 2026 ஆம் நிதி ஆண்டில் ரூ.8,494 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போதைய விஜய்யின் தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2026 -2027 ஆம் நிதி ஆண்டில் கடந்த நிதி ஆண்டை விட 101 கோடி குறைவாக ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    Anbil Mahesh: Under the 'Dravidian Model' administration, the financial allocation for the School Education Department had been on an upward trend. However, former School Education Minister Anbil Mahesh has stated that the funds currently allocated to the department are lower than what was announced in the interim budget presented last February.