அன்பில் மகேஷ்க்கு ஜாமீன் கிடைக்குமா? கோர்ட்டில் மனு தாக்கல்.. 29 ஆம் தேதி விசாரணை

  • சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது நாளை மறுநாள் வியாழக்கிழமை விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஷை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    Advertisement

    தொடர்ந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திமுக மற்றும் அரசு தரப்பில் காரசார வாதம் நடந்தது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி சத்யமூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார்.

    நீதிபதி உத்தரவையடுத்து இரவோடு இரவாக அன்பில் மகேஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முதல் வகுப்பு சிறையில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அவரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து புத்தகங்களை கொடுத்தார். இந்நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement
    ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்கன்னு கரூரில் சொன்னாருல்ல? அதை follow பண்ணிதான் அன்பில் கைது! நிர்மல் கிண்டல்

    சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் நான் லஞ்சம் வாங்கியதாக எந்த ஆதாரமும் இல்லை, லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை. ஆதாரங்கள் இன்றி நான் கைது செய்யப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுவானது நாளை மறுநாள் வியாழக்கிழமை விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    English Summary

    Anbil Mahesh Poyyamozhi: Former DMK minister Anbil Mahesh Poyyamozhi was arrested yesterday and remanded to Puzhal Prison in connection with a case involving the alleged receipt of a ₹100 crore bribe to grant recognition to private schools. Meanwhile, Anbil Mahesh has filed a bail application in the special court for corruption cases in Chennai. Reports indicate that the petition is scheduled to be taken up for hearing the day after tomorrow, Thursday.