உங்களை மாதிரி நேற்று முளைச்ச காளான் இல்ல.. ரெய்டுக்கு பிறகு அன்பில் மகேஸ் தில் பேட்டி

  • திருச்சி: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, நேரு வரிசையில் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் போலீசார் இன்று சோதனை நடத்தினர். திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனை முடிந்த பிறகு இதுகுறித்து அன்பில் மகேஸ் பல தகவல்களை பேட்டியாக வழங்கினார்.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 3 மாதங்களாக பேப்பர், யூடியூப்களில் ஆளாளுக்கு ஒரு செய்தி போட்டனர். அதனடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் வந்து விசாரித்தனர். காலை 7 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை சுமார் 8 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அவர்கள் வந்தவுடனே வீட்டை முழுமையாக காண்பித்தேன். அனைத்து அறைகளும் திறந்தே இருந்தன. எல்லா ட்ரா, பீரோக்கள் இருந்தன.

    Advertisement

    நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்காக வைத்திருந்த ஆவணங்கள் தான் அதில் இருந்தன. அதில் நாங்கள் செய்த சாதனைகள், எங்கள் தலைவர் அறிவுறுத்தல்படி மாவட்ட வாரியாக ஆய்வு செய்து எடுத்த நடவடிக்கையின் பைல்கள் இருந்தன. கல்வித்துறை சம்பந்தமாக உள்ள இதர ஆவணங்கள் இவற்றை மட்டும் தான் எடுத்து சென்றுள்ளனர். 18 ஆம் தேதி நேரடியாக விசாரணைக்கு ஆஜராக சொல்லியுள்ளனர்.

    நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று காவல்றையினர் கேட்டுள்ளனர். நிச்சயமாக ஒத்துழைப்பு வழங்குவேன் என்று கூறினேன். ஒரு சோதனைக்காக இந்த மாதிரி யாரும் ஒத்துழைப்பு கொடுத்ததில்லை. நீங்கள் தான் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் என்று கூறி சென்றனர். எங்களுக்கு மடியில் கணம் இல்லை. அதனால் வழியில் பயமில்லை. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்.

    Advertisement

    அவர்களுக்கு காலம் உரிய பதில் சொல்லும். விரைவில் பதில் சொல்ல காத்திருக்கிறோம். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளாண் இல்லை. 73 ஆண்டுகளாக மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளோம். விசாரணை நியாயமாக நடத்தி நடவடிக்கை எடுங்கள் என சொல்லியுள்ளோம். எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறுவோம்.

    முன்னாள் அமைச்சர் நேரு அண்ணன் சட்டமன்றத்தில் துணிந்து பேசி கேள்வி கேட்டதற்கு அவர் வீட்டில் சோதனை நடத்தினர். கடந்த வாரம் மாநிலம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு வழக்கு போடுவதில் தான் குறியாக உள்ளனர். மக்களுக்காக இவர்கள் செய்தது என்ன. டார்கெட் அவர் தான். இவர் தான் என சொல்லாமல் என்ன நடந்தது என விசாரித்து நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள். தங்கள் இயலாமையை காட்ட தவெக இப்படி செய்கிறது" என்றார்.

    English Summary

    After the CCB search at his premises, former minister Anbil Mahesh said the DMK was not a “mushroom that sprouted yesterday” and asserted that he would cooperate with the investigation while seeking legal recourse if necessary.