அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு.. ஆதாரம் இல்லாமல் எந்த அரசும் சோதனை நடத்தாது.. ஜேசிடி பிரபாகர்

  • திருப்பத்தூர்: எந்த அரசாக இருந்தாலும அடிப்படை முகாந்திரம் இல்லாமல் சோதனை நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 108 ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    Advertisement

    அப்போது, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதிலளித்துப் பேசுகையில், எந்த அரசாக இருந்தாலும் அடிப்படை முகாந்திரம் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் வரலாற்றில் அனைத்து நடவடிக்கைகளும் முகாந்திரத்துடனேயே எடுக்கப்படும். இதுபற்றி முழு விவரம் எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பிறகு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

    சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதி மறுப்பதாக திமுகவினர் கூறுவது குறித்த கேள்விக்கு, பேரவை வரலாற்றில் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு நிமிடம் பேச அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தை ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தேன். மிக மிக அதிகமான நேரம் திமுகவிற்கும் அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அதிமுகவிற்கு அதிக நேரம் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆளுகிற கட்சியினருடைய அங்கத்தினர் பலருக்கு வாய்ப்பு நிதானமாக தரப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அதிக நேரம் தாராளமாக வாரி வழங்கினார் என்று புகழாரம் சூட்டியதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். யாருடைய குரல்வளையையும் நெறிப்பது என் நோக்கம் அல்ல. உரிய நேரத்தில், உரிய இடத்தில் அனைவருக்கும் வாய்ப்பு சீராக, செம்மையாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதிபடச் சொல்ல முடியும், ஆதாரங்களோடு விளக்க முடியும் என்று கூறினார்.

    English Summary

    Tamil Nadu Assembly Speaker JCD Prabhakar said governments generally do not conduct search operations without a basis, while stating that he would comment further on the Anbil Mahesh raid after receiving complete details.