சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
இரவு 10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆஜர்படுத்தப்பட்டார். அரசு மற்றும் திமுக தரப்பில் காரசார வாதம் நடந்தது. அன்பில் மகேஷ் கைது சட்டவிரோதம் என திமுக தரப்பிலும், அன்பில் மகேஷ் வெளியில் சென்றால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என அரசு தரப்பிலும் வாதம் வைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் காரசார வாதம் நடந்தது. இறுதியில் 12.20 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி சத்யமூர்த்தி வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பிறகு அன்பில் மகேஷ்க்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ரூ.100 கோடி ஊழல் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்த நிலையில், அவரை சென்னை அமைந்தகரையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகம் அழைத்து வரப்பட்ட அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். வீடியோ பதிவு செய்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அன்பில் மகேஷ் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சென்னை காவல் ஆணையரகம் அழைத்து செல்லப்பட்டார். பிறகு இரவு 10 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு அன்பில் மகேஷ் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது திமுக மற்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியமா நடக்கிறது.. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது முறையாக இல்லை.. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த உடனே கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?.. அன்பில் மகேஷ் ஒன்றும் தீவிரவாதி இல்லை.. என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதம் வைத்தார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ரூ.400 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க நேரிடும். கைது நடவடிக்கை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டது. என்று கூறினார். அன்பில் மகேஷ் கைது சட்டவிரோதம் என திமுக தரப்பிலும், அன்பில் மகேஷ் வெளியில் சென்றால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என அரசு தரப்பிலும் வாதம் வைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் காரசார வாதம் நடந்தது. இறுதியில் நீதிபதி சத்யமூர்த்தி, காவல்துறையினர் உங்களை துன்புறுத்தினார்களா என்று கேட்டார். இதற்கு அன்பில் மகேஷ் இல்லை என பதில் அளித்தார். இதையடுத்து நள்ளிரவு 12.20 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி சத்யமூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து புழல் சிறையில் நள்ளிரவில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அன்பில் மகேஷ் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறையில் அவருக்கு நோ ஆயில் நோ புரோட்டின் உனவுகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அன்பில் மகேஷ் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறையில் உணவு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக தனக்கு கணையம் சார்ந்த உடல்நல பிரச்சினை இருப்பதாக அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. முன்னதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ், "சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்.. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.. இது யாருக்கோ கண்ணை உறுத்துகிறது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர்" என்றார்.அன்பில் மகேஷ் கைது
நீதிமன்றத்தில் ஆஜர்
அன்பில் மகேஸ் கைது! தவெக அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது.. ஸ்டாலின் கடும் கோபம்
வில்சன் வாதம்
அரசு தரப்பு வாதம்
Sekar Babu: அன்பில் மகேஷ் அலைக்கழிப்பு! தவெக எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது.. சேகர் பாபு கொந்தளிப்பு
6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார்
அன்பில் மகேஷ் என்ன பயங்கரவாதியா? ரிமாண்ட் செய்யக்கூடாது.. வழக்கறிஞர் வில்சன் வாதம்
அன்பில் மகேஷ் பேட்டி