ஸ்டாலினுக்கு மனம் இருந்தது.. திமுக பக்கமாக நெருங்கிறதா பாமக? சூசகமாக பேசும் அன்புமணி

  • சென்னை: திமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை ஸ்டாலின் கொடுக்க தயாராக இருந்தார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தீவிரமாக முயற்சித்து வரும் சூழலில், பாமக தொண்டர்கள அன்புமணி தயார் செய்யும் பணியை தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்று பாமக இதுவரை அறிவிக்கவில்லை. அதிமுக உடனான கூட்டணியில் பாமக இருந்தாலும், அது தொடருமா என்ற சந்தெகம் எழுந்துள்ளது. மறுபக்கம் தவெக தலைமையுடன் அன்புமணி மற்றும் செளமியா இருவருமே நெருக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் தவெக உடன் விசிக நேரடி கூட்டணியில் இருக்கிறது.

    Advertisement

    மறுபக்கம் வட மாவட்டங்களில் மீண்டும் வலிமை பெற திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதற்காக பாமகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக தலைமை முடிவு செய்து பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. ஆனால் அன்புமணி தரப்பு இதுவரை யாருக்கும் பிடி கொடுக்கவில்லை. அதிமுக உடனான கூட்டணியில் இணைந்ததில் இருந்து பாமக பெரிய வெற்றியையோ, லாபத்தையோ அடையவில்லை.

    பாஜகவும் மத்திய அமைச்சரவையில் இணைக்க எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. இதனால் கூட்டணியை மாற்ற அன்புமணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப அன்புமணி தனது தொண்டர்களை தயார் செய்ய தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை ஸ்டாலின் கொடுக்க தயாராக இருந்தார்.

    Advertisement

    ஆனால் அமைச்சர்களாக இருந்த எவ வேலு, கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஸ்டாலினிடம் பிரச்சனை வந்துவிடும் என்று கூறி தடுத்தனர். இறுதியாக பிரச்சனை வந்தது. ஆனால் அது தேர்தலில் எதிரொலித்தது. இதன் காரணமாகவே திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

    வழக்கமாக திமுகவை கடுமையாக சாடும் அன்புமணி, இம்முறை ஸ்டாலினுக்கு மனம் இருந்தது என்று பேசி இருக்கிறார். இதனால் பாமக தொண்டர்களை தயார் செய்யும் பணிகளில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இடம்பெறாது என்பதால், திமுக உடன் விரைவில் இணையும் முடிவை அன்புமணி எடுப்பார் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Anbumani: PMK - DMK Alliance in the Making? Anbumani Positive Remarks on Stalin Trigger Buzz