அமைச்சர் அருண்ராஜ் நல்லா தான் வேலை செய்கிறார்.. ஆனாலும்.. ட்விஸ்ட் வைத்துப் பேசிய அன்புமணி ராமதாஸ்!

  • சென்னை: தமிழக்கத்தில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் தீவிர தன்மையில்லாத கோவிட் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் கை, கால் மற்றும் வாய் பாதிப்பு நோய் அதிக அளவு பரவி வருவதாகவும், அண்ணா பல்கலைகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் காய்ச்சல் பாதிப்பிற்கு இறந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    Advertisement

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நாமக்கல் வந்தார். தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று மணமக்களையும் வாழ்த்தினார்.

    Advertisement

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," அண்ணா பல்கலைகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் காய்ச்சல் பாதிப்பிற்கு இறந்துள்ளது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த நவீன உலகில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில் போதிய கண்காணிப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    அன்புமணி ராமதாஸ்

    தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் இத்துறையில் சிறப்பாக பணியாற்றினாலும், தினந்தோறும் கண்காணித்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது அவர்களின் நிலைப்பாடு. பாமக தேர்தலில் பங்கேற்பதில்லை என்பது பாமக நிலைப்பாடு.

    Advertisement

    மின்வெட்டு

    இது இடைத்தேர்தலுக்கான நிலைப்பாடு. முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் கோர்வையாக பேச வேண்டும் என்பதற்காக மின்வெட்டு அரிவாள் வெட்டு குறித்து பேசி வருகிறார். தமிழகத்தில் நிச்சயமாக மின்வெட்டு இருக்கிறது. 10 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக செப்டம்பர் மாதத்தில் நான்காயிரம் மெகவாட் மின்சாரம் தேவைப்பட்ட நிலையில் அது பற்றாக்குறையால் தான் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    தமிழக அரசு

    மின்வெட்டை தவிர்க்க அதிகாரிகள் திட்டமிடாதாதே காரணம். அதேபோல் மின் உற்பத்தியை தமிழக அரசு செய்யாமல் வெளி நபர்களிடம் இருந்துதான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு 21 ஆயிரம் மெகாவாட் தேவை என்ற நிலையில் தமிழக அரசு 5000 முதல் 7000 மெகாவாட் மின்சாரத்தை தான் தமிழக அரசு உற்பத்தி செய்கிறது.

    Advertisement

    மின்வாரியம்

    3 ரூபாய் 50 காசுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய கூடிய நிலையில், 9 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து கமிஷனுக்காக மின்சாரத்தை வாங்குகின்றனர். இதனை அமைச்சர் சரி செய்து மின்வாரியத்தை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    English Summary

    Anbumani praises Arunraj’s work but urges stronger dengue monitoring, while alleging power shortages are hurting Tamil Nadu industries.