சொல்லுங்க.. அந்தமானுக்கு ஒரு நீதி.. கர்நாடகாவுக்கு ஒரு நீதியா? ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி!

  • சென்னை: மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு நன்மை அதிகம் என்பது தவறான கருத்து எனவும், 2 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக கர்நாடகா முதல்வர் சிவக்குமார் அரசியல் செய்து வருகிறார் எனவும். அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவுக்கு ஒரு நீதியா? ராகுல் காந்திக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு மாநில சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் தலைவரும் பாமக தலைவருமானஅன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    Advertisement

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ்," காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் எப்படியாவது அணையை கட்டிவிட வேண்டும் என கர்நாடக அரசு துடித்து வருகிறது ஏற்கனவே காவிரியில் 4 பெரிய அணைகள் இருக்கிறது.

    அன்புமணி ராமதாஸ்

    அதன் மொத்த கொள்ளளவு 115 டிஎம்சி இப்போது மேகதாதுவில் அணை கட்டினால் அதனுடைய அளவு 70 டிஎம்சி ஆக மொத்தம் அவர்களிடம் 185 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கும். ஆனால் நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறது அது 93 டிஎம்சி அதிலும் தற்போது 40 டிஎம்சி மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது அதன் காரணமாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி என்பது தமிழ்நாட்டில் ஐந்தரை கோடி மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான ஆறு. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்ட மக்கள் காவிரி நதி நீரை நம்பி தான் இருக்கிறார்கள்.

    Advertisement

    காவேரி டெல்டா

    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் உணவு அளிக்கக்கூடிய மண்ணாக காவேரி டெல்டா மண் இருக்கிறது காவேரியில் இருந்து தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா பாலைவனமாக மாறிவிடும். கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் கொடுத்த எந்த தீர்ப்பையுமே கர்நாடக அரசு மதிக்கவில்லை. நீங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடவில்லை என்றால் உங்கள் ஆட்சியை கலைக்க வேண்டிய நிலை வரும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தும் கூட அவர்கள் நமக்கு உரிய நீரை கொடுக்கவில்லை.

    கர்நாடக அரசு

    இப்படி சூழல் இருக்கும்போது கர்நாடக அரசை நம்பி எப்படி நாம் அங்கு அணை கட்ட அனுமதிக்க முடியும்? மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு தான் அதிக நன்மை என்பது ஏமாற்று வேலை. பெங்களூருவில் குடிதண்ணீருக்காக அணை கட்டுகிறோம் என்றால் 70 டிஎம்சி யில் அணை கட்ட வேண்டிய அவசியம் என்ன பெங்களூருவின் குடிதண்ணீருக்கு 10-12 டிஎம்சி இருந்தாலே போதும். 2033 வரை காவிரியில் யாரும் எந்த புது நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி கர்நாடக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    Advertisement

    டிகே சிவகுமார்

    கர்நாடகா முதலமைச்சர் டிகே சிவகுமார் அரசியல் செய்வதற்காக இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வருகிறார் 2028 பிப்ரவரியில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது எனவே எதை வைத்து சென்டிமென்ட் ஆக அங்கே பேசி வாக்குகளை கவர்வதற்கான முயற்சியிலே அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ராகுல் காந்தி

    இந்த நேரத்தில் ராகுல் காந்தியை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் The Great Nicobar Project என்ற ஒரு ப்ராஜெக்ட் அறிவித்து இருக்கிறார்கள். சீனா-வின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. அந்த திட்டம் கொண்டு வந்தால் அந்த வழியாகத்தான் கப்பல் போக்குவரத்து போன்றவை எல்லாம் நடைபெறும் என்பதால் அந்தத் திட்டம் வந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு நன்மையும் ஏற்படும்.. வருமானமும் அதிக அளவில் கிடைக்கும்.

    Advertisement

    மேகதாது அணை

    ஆனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் ராகுல் காந்தி அந்த சட்டத்தை எதிர்க்கிறார்.
    அங்குள்ள காடுகள் அழிக்கப்படும் என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார். அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவிற்கு ஒரு நீதியா? இங்கு 12,500 ஏக்கர் காடுகளை அழித்தால் காட்டில் உள்ள புலிகள்,யானைகள் போன்ற வனவிலங்குகள் என்ன செய்யும் பறவைகள் என்ன செய்யும். எனவே சட்ட ரீதியாகவும், சூழியல் ரீதியாகவும் மேகதாதுவில் அணைகட்ட நினைக்கும் கர்நாடக அரசின் முயற்சி தவறு" என்றார்.

    English Summary

    Anbumani Ramadoss questions Rahul Gandhi over Mekedatu dam issue, alleging double standards between Karnataka and Great Nicobar project.