தமிழக அரசு செய்கின்ற பெரிய துரோகம்.. அசிங்கமாக இல்லையா உங்களுக்கு? அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ்!

  • சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று வரையறை படுத்த வேண்டும்.அறிவிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சதுப்பு நிலம் பாதுகாக்கப்படும். இது தமிழக அரசு செய்கின்ற பெரிய துரோகம். நாம் இயற்கையை பாதுகாப்பதற்கு ஒரு அரசுக்கு கூட துப்பு இல்லையா? அசிங்கமாக இல்லையா உங்களுக்கு? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னை பெருநகரை பெருவெள்ள ஆபத்திலிருந்து காக்க பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லையை வரையறை செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைமையில் சென்னை துரைப்பாக்கத்தில் நடைபெறும் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கியது.

    Advertisement

    நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ்," பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை (நோட்டிபிகேஷன்) செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
    பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது வரை வரையறை படுத்தப்படவில்லை.

    அன்புமணி ராமதாஸ்

    இதுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று வரையறை படுத்த வேண்டும்.அறிவிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சதுப்பு நிலம் பாதுகாக்கப்படும். இது தமிழக அரசு செய்கின்ற பெரிய துரோகம். நாம் இயற்க்கையை பாதுகாப்பதற்கு ஒரு அரசுக்கு கூட துப்பு இல்லையா அசிங்கமாக இல்லையா உங்களுக்கு. இயற்கை கொடுத்த வரம் இது. இந்த வரத்தை பாதுகாக்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் நோக்கமா என்ன நீங்கள் காசு கொடுத்து வாங்கிய சொந்த நலமாக இருந்தால் இப்படி விட்டு விடுவீர்களா?

    Advertisement

    பள்ளிக்கரணை சதுப்புநிலம்

    உடனடியாக சர்வே செய்து கல் போட்டு வேலி போட்டு பாதுகாத்து வைத்திருப்பீர்கள் அல்லவா.. ஆனால் இது அரசு நிலம். அதனால் இதை யார் வேணாலும் போய் எடுத்துக் கொள்ளுங்கள். வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு இங்கு 15 ஆயிரம் ஏக்கர் இருந்தது. ஆனால் தற்போது 2500 ஏக்கர் மட்டும்தான் இருக்கிறது. இருக்கக்கூடிய அத்தனை இடங்களும் அடையாறு பெருங்குடி என்று வீடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.

    சென்னை ஈரநிலம்

    ஊழல் செய்வதற்காகத்தான் இந்த இரண்டு கட்சிகளும் எத்தனை ஆண்டுகளாக இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்கவில்லை. சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக 14 ஆண்டுகளுக்கு முன்பே ஆணையம் அமைக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஈரநில ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கெல்லாம் ஒரு அலுவலகம், காரு, ஒரு ஆணையர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    Advertisement

    ராம்சார் தளம்

    தமிழ்நாட்டில் 20 இடங்களுக்கு ராம் சார் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இதுதான் மிகப் பெரியது அதுவும் சென்னையில் இருக்கிறது. பசுமை தீர்ப்பாயம் ஒரு ஆணை பிறப்பித்து இருக்கிறார்கள். சதுப்பு நிலத்திற்கு ஒரு கிலோமீட்டர் சுற்றிலும் எந்த கட்டுமானமும் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

    தமிழக அரசு

    இதனால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பூர்வ குடிமக்கள் வீடு கட்ட முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த சதுப்பு நிலத்தையும் பாதுகாக்க வேண்டும் சுற்று வட்டாரங்களில் இருக்கக்கூடிய காலம் காலமாக வசிக்கக்கூடிய மக்கள் வீடு கட்டுவதற்கும் ஒரே தீர்வுதான் இருக்கிறது. தமிழக அரசு எது சதுப்பு நிலம்; எதுவரை இந்த நிலம் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு அதை அறிவிக்கையாக வெளியிட வேண்டும்." என்றார்.

    English Summary

    PMK leader Anbumani Ramadoss demands immediate notification and protection of Chennai's shrinking Pallikaranai marshland.