பாதியில் இறக்கி விடப்பட்ட தமிழக விவசாயிகள்.. மராட்டிய அரசை கண்டிக்கனும்! விஜய்க்கு அன்புமணி கோரிக்கை

  • சென்னை: தில்லியில் போராட ரயிலில் சென்ற தமிழக உழவர்களை நாக்பூரில் மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டது அநீதி எனவும், மராட்டிய அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் எனவும், தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து தில்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர்.

    Advertisement

    தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர்.

    தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு.

    அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

    Advertisement

    தில்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.

    English Summary

    Anbumani Ramadoss condemns Maharashtra police action against Tamil Nadu farmers and urges CM Vijay to intervene.