அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவால் உயிரிழக்கவில்லை - சுகாதாரத்துறை விளக்கம்!

  • சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர் ஒருவர் உயிரிழந்தது டெங்குவால் இல்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. SCRUB TYPHUS என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றால் மாணவர் பாதிக்கப்பட்டதாகவும், மேலும் யாருக்காவது இந்த பாதிப்பு உள்ளதா? என்பதை பரிசோதனை செய்து வருவதாகவும் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாத்துறை தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் 87 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் 4ஆம் ஆண்டு படித்து வந்த ஹரிஷ்குமார் என்ற மாணவர் இன்று பலியானார். அவர் டெங்கு காய்ச்சலால் பலியானதாக தகவல் பரவிய நிலையில், சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    SCRUB TYPHUS என்ற Orientia Tsutsugamushi பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றால் மாணவர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செடி, கொடிகளில் உள்ள பூச்சிகள், உண்ணிகளால் ஏற்படும் தொற்று ஸ்கர்ப் டைபஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பால் தான் அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    மேலும் வேறு யாருக்காவது இந்த பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    English Summary

    Health Department has clarified that the death of a student at Anna University in Chennai today was not caused by dengue. It stated that the student had contracted an infection caused by the bacterium scrub typhus and added that tests are being conducted to determine if anyone else is affected.