தவெகவை கண்காணிக்க தனி குழு.. ஜனவரியில் ஆக்‌ஷனுக்கு ரெடியாகும் அண்ணாமலை.. மாறும் ஆட்டம்!

  • சென்னை: வீ தி லீடர்ஸ் அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை ஜனவரி மாதம் முதல் தனது அதிரடி ஆக்‌ஷன் அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. தவெகவின் ஊழல் தொடர்பாக ஒரு கண்காணிப்பு குழுவை அண்ணாமலை உருவாக்கியுள்ளதாக பேச்சுகள் அடிபடுகிறது. அதுமட்டுமல்லாமல் விரைவில் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலமாக போதைப்பொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் கல்லூரி தோறும் மாணவர்களை சந்தித்து அண்ணாமலை உரையாடி வருகிறார். அண்மையில் வீ தி லீடர்ஸ் அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின், அரசியல் கட்சியாக மாற்றுவோம் என பேசியிருந்தார்.

    Advertisement

    தற்போது வரை அந்த அமைப்பில் 20 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே இணைந்திருக்கின்றனர். இதனால் அடுத்தக் கட்டமாக மிஸ்டு கால் வழியை அண்ணாமலை பயன்படுத்த இருக்கிறார். அந்த நம்பருக்கு வரும் மிஸ்டு கால்களை கண்காணித்து அவர்களிடம் பேசி உறுப்பினராக்க ஒரு பிரத்யேக குழுவையும் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

    அண்ணாமலையின் அடுத்த கூட்டத்தில் அந்த மிஸ்டு கால் நம்பர் அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை விரைவில் வெளியிட தயாராகி வருகிறார். மாவட்ட நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிட்ட பின், உறுப்பினர்கள் எண்ணிக்கை அடுத்தக் கட்டத்தையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இருப்பினும் அண்ணாமலையின் அதிரடி பிரஸ்மீட் தான் மிஸ்ஸிங் என்று அவரின் ஆதரவாளர்கள் முனுமுனுத்து வருகின்றனர். தவெகவை இதுவரை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க தொடங்கவில்லை. தற்போதைய சூழலில் அமைப்பை கட்டமைப்பு ரீதியாக சைலண்ட்டாக வலுப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்து வருகிறது.

    ஆனாலும் தவெகவின் முறைகேடு, ஊழல், துறை ரீதியாக நடக்கும் குழப்பங்களை கண்காணிக்க அண்ணாமலை ஒரு குழுவையும் தயார் செய்திருக்கிறார். அந்த குழு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜனவரி மாதத்திற்கு பின் அண்ணாமலை அதிரடியாக ஆதாரங்களுடன் தவெகவை விமர்சிப்பார் என்று பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தலில் போட்டியிடும் எந்த பிளானும் அண்ணாமலையிடம் இல்லை. இதனை ஏற்கனவே அண்ணாமலை வெளிப்படையாக கூறிவிட்டார். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலை கணக்கு என்னவாக இருக்கும் என்பதே அவரின் ஆதரவாளர்கள் கேள்வியாக உள்ளது.

    English Summary

    Annamalai: Annamalai Gear Up for High-Octane Politics, Focus Shifts to TVK Corruption